ஆசிய கோப்பையை வென்றதன் கையோடு இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடர் இன்று (அக்டோபர் 02) முதல் அக்டோபர் 14ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் முதல் போட்டி இன்று (அக்டோபர் 02) அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கி நடந்து வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ரோஸ்டன் சேஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
Add Zee News as a Preferred Source
பும்ரா சாதனை
அதன்படி பேட்டிங் செய்தனர். ஆனால் இந்தியாவின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறிய நிலையில், 162 ரன்களில் ஆல் அவுட் ஆகியது. அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 விக்கெட்களையும் ஜஸ்பிரித் பும்ரா 3 விக்கெட்களையும் வீழ்த்தினர். 44.1 ஓவரில் டெஸ்ட் இண்டீஸ் அணியை சுருட்டியது இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள். இந்த நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா சாதனை படைத்துள்ளார்.
குறைவான பந்துகளில் 50 விக்கெட்கள்
அவர் சொந்த மண்ணில் அதாவது இந்திய மண்ணில் 50 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்திருக்கிறார். இதற்கு 1747 பந்துகள் மட்டுமே தேவைப்பட்டிருக்கிறது. சொந்த மண்ணில் இந்திய பந்து வீச்சாளர்களில் 50 விக்கெட்களை வீழ்த்த குறைந்த பந்துகளை எடுத்துக்கொண்டது பும்ரா தான். அதேபோல் இந்த சாதனையை படைக்க வெறும் 24 இன்னிங்ஸ்கள் மட்டுமே தேவைப்பட்டுள்ளது.
முன்னதாக ஜகவல் ஸ்ரீநாத் 23 இன்னிங்ஸ்களில் சொந்த மண்ணில் 50 விக்கெட்களை வீழ்த்தினார். இதையடுத்து முன்னாள் கேப்டன் கபில் தேவ் 25 இன்னிங்ஸ்களில் 50 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். இஷாந்த் சர்மா மற்றும் முகமது ஷமி 27 இன்னிங்களில் 50 விக்கெட்களை வீழ்த்தி இருக்கின்றனர். இந்த நிலையில், ஜஸ்பிரித் பும்ரா 24 இன்னிங்ஸ்களில் 1747 பந்துகள் வீசி 50 விக்கெட்களை வீசி சாதனை படைத்திருக்கிறார். ஜஸ்பிரித் பும்ராவின் சாதனை ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்திருக்கிறது.
About the Author
R Balaji