வாஷிங்டன்,
அமெரிக்க தலைநகர் நியூயார்க்கில் உள்ள லாகார்டியா விமான நிலையத்தில் இருந்து விர்ஜீனியாவுக்கு புறப்பட விமானம் ஒன்று தயாராக நின்று கொண்டிருந்தது. அப்போது வட கரோலினா மாகாணம் சார்லோட்டில் இருந்து புறப்பட்ட விமானம் லாகார்டியா விமான நிலையத்தில் தரையிறங்கியது. அப்போது அந்த விமானம் ஓடுதளத்தில் நின்று கொண்டிருந்த விமானத்தின் மீது மோதியது.
இதில், அந்த விமானத்தின் இறக்கை உடைந்து கீழே விழுந்தது. இதில் விமான பணிப்பெண்ணுக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து விமானத்தில் இருந்த பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இதனால் விமான நிலையம் சிறிதுநேரம் பரபரப்பாக காணப்பட்டது. விமானம் மிக மெதுவாக நகர்ந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.