சென்னை: இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் 772 புதிய வீடுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும், பல மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள மருத்துவமனை கட்டிடங்களை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின், ஓமியோபதி ஆணையரகம் சார்பில், புதிய கட்டடங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். சென்னையில் தலைமைச்செயலகத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக நலத்திட்ட உதவிகளை வழங்கியும், கூடுதல் கட்டடங்களை திறந்தும் வைத்தார். அதன்படி, தமிழகத்தில் பல்வேறு துறைகள் சார்பாகக் கட்டப்பட்ட கூடுதல் கட்டடங்களை […]
