ரூ.7.99 லட்சத்தில் 2025 மஹிந்திரா பொலிரோ அறிமுகமானது | Automobile Tamilan

ஊரகப்பகுதி மட்டுமல்லாமல் நகர்ப்புறம் என இரண்டு சாலைகளுக்கும் ஏற்ற சிறப்பான மஹிந்திராவின் பொலிரோ எஸ்யூவி மாடலின் ஆரம்ப விலை ரூ.7.99 லட்சம் முதல் ரூ.9.69 லட்சம் வரை எக்ஸ்-ஷோரூம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புதிய பொலிரோ மட்டுமல்லாமல் பொலிரோ நியோ மாடலும் புதுப்பிக்கப்பட்ட பம்பர் உட்பட சில கூடுதலான அம்சங்களை கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Mahindra Bolero

2000 ஆம் ஆண்டு முதல் கடந்த 25 ஆண்டுகளாக சுமார் 17 லட்சத்துக்கும் கூடுதலான வாடிக்கையாளர்களை பெற்றுள்ள இந்த புதிய பொலிரோ எஸ்யூவி மாடலில் ஸ்டெல்த் பிளாக் என்ற புதிய நிறம் கொடுக்கப்பட்டு கூடுதலாக B8 என்ற டாப் வேரியண்ட் சேர்க்கப்பட்டுள்ளது.

என்ஜின் ஆப்ஷனில் தொடர்ந்து 75BHP பவரை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் எம் ஹாக் 75 என்ஜின் பொருத்தப்பட்டு 210Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில், 5 வேக மேனுவல் கியர்பாக்ஸூடன் கிடைக்கின்றது.

2025 Bolero variant-wise prices

Variant New Price
B4 ₹ 7.99 lakh
B6 ₹ 8.69 lakh
B6 (O) ₹ 9.09 lakh
B8 ₹ 9.69 lakh

முன்புறத்தில் க்ரோம் பூச்சூ பெற்ற புதிய 5-ஸ்லாட் கிரில். பொலேரோ இப்போது B6 டிரிம் முதல் மூடுபனி விளக்குகளையும், டாப்-ஸ்பெக் B8 டிரிமில் புதிய 16-இன்ச் அலாய் வீல் பெறுகிறது. தற்போதுள்ள டயமண்ட் ஒயிட், DSAT சில்வர் மற்றும் ராக்கி பீஜ் ஆகியவற்றுடன், புதிய ஸ்டெல்த் பிளாக் என்ற நிறமும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் கருமை நிறத்தை விரும்புவோருக்கு ஏற்றதாகவும், அலாய் வீல் ஸ்டைலிஷாகவும் உள்ளது.

பொலிரோ எஸ்யூவி மாடலில் மீடியா கட்டுப்பாடுகளுக்கான தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை 17.9செ.மீ கொண்டு,  புதிய ஸ்டீயரிங் மவுண்டட் கட்டுப்பாடுகள், USB-Type C வகை சார்ஜிங் போர்ட், புதிய லெதரெட் அப்ஹோல்ஸ்டரி மற்றும் கதவு டிரிம்களில் புதிய பாட்டில் ஹோல்டர்களையும் பெறுகிறது.

இருப்பினும், பாதுகாப்பு சார்ந்த முக்கியமான ஆறு ஏர்பேக்குகள் இன்னும் ஒரு பகுதியாக இல்லை, தற்பொழுது அனைத்து டிரிம்களிலும் இரட்டை ஏர்பேக்குகளுடன் தொடர்கிறது.

மற்றபடி, இந்த 2025 பொலிரோ காரின் சஸ்பென்ஷன், ரைடிங், கையாளும் அனுபவம் முந்தைய மாடலை விட சிறப்பாக இருக்கும் என மஹிந்திரா குறிப்பிட்டுள்ளது.

Related Motor News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.