கோவை: தமிழ்நாட்டின் மிக நீளமான முதல் அவிநாசி உயர்மட்ட ஜிடி நாயுடு மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். கோவை அவிநாசி சாலையில் ரூ.10.1 கி.மீ. தூரத்திற்கு ரூ.1,791 கோடியில் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டு உள்ளது. கோவை கோல்ட்வின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை 10.1 கி.மீ. தூரத்திற்கு மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது . இந்த மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். முன்னதாக இன்று காலை சென்னையில் இருந்து தனி […]