Hardik Pandya Mahieka Sharma Dating Rumours: இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா, ஆசிய கோப்பை தொடரில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் விளையாட முடியாமல் போனது. தொடர்ந்து காயம் காரணமாக ஆஸ்திரேலியா ஓடிஐ, டி20ஐ தொடரிலும் ஹர்திக் பாண்டியா இடம்பெறவில்லை.
Add Zee News as a Preferred Source
தற்போது அவர் காயத்தில் இருந்து மீண்டு வரும் நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஓடிஐ மற்றும் டி20ஐ தொடர்களுக்கு அவர் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில், மீண்டும் தலைப்புச் செய்திகளில் சிக்கியிருக்கிறார். ஆனால், இம்முறை அவரது காதல் வாழ்க்கை குறித்த கிசுகிசு தற்போது வெளியாகி உள்ளது.
Hardik Pandya: மும்பை விமான நிலையத்தில் மேட்சிங்
ஹர்திக் பாண்டியா, மாடல் மஹைகா சர்மாவை டேட்டிங் செய்வதாக தகவல்கள் வெளியாகின. ஹர்திக் பாண்டியா – மஹைகா சர்மா ஆகியோர் மும்பை விமான நிலையத்தில் ஒன்றாக தென்பட்டுள்ளனர். அதன் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன.
இருவரும் மேட்சிங்காக கருப்பு நிற ஆடையை அணிந்திருந்தனர்.இருவரும் பொதுவெளியில் தென்படுவது இதுதான் முதல்முறை. ஆனால், இப்போது வரை இருவருமே தங்களின் உறவு குறித்து உறுதிப்படுத்தவில்லை. இருவரும் ஒரே நிறத்தில் ஆடைப்போட்டுக்கொண்டு, ஜோடியாக சுற்றித் திரிவதுதான் ரசிகர்களை கிசுகிசுக்க வைத்திருக்கிறது.
Hardik Pandya: யார் இந்த மஹைகா சர்மா?
ஹர்திக் பாண்டியா – மஹைகா சர்மா இருவரும் பரஸ்பரம் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்ந்த நிலையில், ரசிகர்கள் முதன்முதலில் சந்தேகத்தை கிளப்பினர். ஹர்திக் பாண்டியா அவரது மனைவி நடாஷா ஸ்டான்கோவிக்கை பிரிந்த சில நாள்களிலேயே இந்த கிசுகிசு வெளியானது குறிப்பிடத்தக்கது.
Hardik Pandya with a new girl.
– Looks like bro living his dream life. pic.twitter.com/1qEtlkaglM
— Ankit Choudhary (@Ankit7083) October 10, 2025
ஹர்திக் பாண்டியா – நடாஷா ஆகியோருக்கு 2020ஆம் ஆண்டு மே மாதம் திருமணம் நடந்தது. தொடர்ந்து, கொரோனா காலகட்டம் முடிந்து 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உதய்பூரில் பிரம்மாண்ட திருமணமும் நடந்தது. இவர்களுக்கு அகஸ்தியா என்ற மகன் உள்ளார் இவர்கள் கடந்த 2024ஆம் ஆண்டில் இருந்து பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மறுபுறம், மஹைகா சர்மா மாடலிங்கில் கொடிக்கட்டி பறந்தாலும் கூட, கல்வியிலும் சிறந்து விளங்குபவர். பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர். தொடர்ந்து, மாடலிங் மற்றும் திரைப்படங்களில் கவனம் செலு்ததி வருகிறார்.
மேலும் படிக்க | தோனி விளையாடுவது உறுதி… CSK கழட்டிவிடும் இந்த 5 வீரர்கள் – மினி ஏலத்தின் முரட்டு பிளான்!
மேலும் படிக்க |ஐபிஎல் மினி ஏலம் எப்போது? Retention கடைசி நாள் இதுதான் – புதிய அப்டேட்
மேலும் படிக்க | மதுரை மைதானத்தை திறந்து வைத்த தோனி.. ஸ்டேடியத்தின் சிறப்பம்சங்கள் என்னென்ன?
About the Author
Sudharsan G
I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
…Read More