முன்னாள் பிரதமர் தேவகவுடா உடல்நிலையில் முன்னேற்றம்

பெங்களூரு: முன்​னாள் பிரதமரும் மஜத தேசிய தலை​வரு​மான தேவக​வு​டாவுக்கு (92) கடந்த திங்​கள்​கிழமை இரவு திடீரென சுவாசிப்​ப​தில் பிரச்​சினை ஏற்​பட்​டது. இதனால் அவருக்கு பெங்​களூரு​வில் உள்ள மணிப்​பால் மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை அளித்​தனர்.

மத்​திய கனரக தொழில்​கள் மற்​றும் எஃகுத் துறை அமைச்​சரும், தேவக​வு​டா​வின் இளைய மகனு​மான குமார​சாமி நேற்று தனது தந்​தையின் உடல்​நிலை குறித்து மருத்​து​வர்​களிடம் கேட்​டறிந்​தார்.

பின்​னர் குமார​சாமி கூறுகை​யில், ‘‘முன்​னாள் பிரதமர் தேவக​வுடா நலமாக உள்​ளார். அவரது உடல்​நிலை குறித்து கவலைப்​படத் தேவையில்​லை. கடவுள், மக்​களின் ஆசி​யுடன், அவர் நலமாக இருக்​கிறார். அவரது உடல்​நிலை​யில் நல்ல முன்​னேற்​றம் ஏற்​பட்​டுள்​ள​தால், அவர் மூன்று முதல் நான்கு நாட்​களில் மருத்​து​வ​மனை​யில் இருந்து வீட்​டுக்கு திரும்​பு​வார்” என்றார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.