இந்திய கடற்படைக்காக கடல்சார் மின்சார உந்துவிசை (EP) அமைப்புகளை கூட்டாக உருவாக்கும் திட்டத்தில் இந்தியாவும் இங்கிலாந்தும் விரைவில் கைழுதிட உள்ளதாக HMS பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் கேரியர் ஸ்ட்ரைக் குழுவின் (CSG) தளபதி கமாடோர் ஜேம்ஸ் பிளாக்மோர் கூறியுள்ளார். கோவாவில் நடைபெற்ற 4வது இந்தியா-யுகே மின்சார உந்துவிசை திறன் கூட்டாண்மை பணிக்குழு கூட்டத்தைத் தொடர்ந்து இந்த கருத்து வெளியாகியுள்ளது. ராணுவ வீரர்கள் மற்றும் ராணுவ தளவாடங்களை ஏற்றிச் செல்லும் இந்தியாவின் ஆம்பிபியஸ் கப்பல்களுக்கான EP அமைப்புகளை உருவாக்குவதற்கும் […]
