நம்பமுடியாத சலுகை.. பட்ஜெட் விலையில் சாம்சங் ஸ்மார்ட்போனை வாங்கலாம், எந்த மாடல் தெரியுமா?

Samsung Galaxy M06 5g Smartphone: நீங்கள் பட்ஜெட் பிரிவில் சிறந்த சாம்சங் ஸ்மார்ட்போனை வாங்க நினைத்துக் கொண்டு இருந்தால், அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேலின் (Amazon Great Indian Festival Sale) தீபாவளி சிறப்பு சலுகைகள் சிறந்த சலுகையை வழங்குகிறது. இந்த சலுகை Samsung Galaxy M06 5G ஸ்மார்ட்போனில் கிடைக்கிறது. 4GB RAM மற்றும் 64GB இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட இந்த ஸ்மார்ட்போன், Amazon தளத்தில் 7,499 ரூபாய்க்கு கிடைக்கிறது. இந்த சாதனத்தை ரூபாய் 374 வரை கேஷ்பேக் மூலம் வாங்கலாம். ரூபாய் 364 முதல் தொடங்கும் EMI-யிலும் இந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம். அதுமட்டுமின்றி இந்த ஸ்மார்ட்போனை எக்ஸ்சேஞ்ச் சலுகையுடனும் பெறலாம். எக்ஸ்சேஞ்ச் சலுகை மூலம் பெறப்படும் தள்ளுபடி உங்கள் பழைய ஸ்மார்ட்போனின் நிலை, பிராண்ட் மற்றும் நிறுவனத்தின் எக்ஸ்சேஞ்ச் பாலிசியைப் பொறுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Add Zee News as a Preferred Source

Samsung Galaxy M06 5G அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள்
Samsung Galaxy M06 5G 720×1600 பிக்சல் தெளிவுத்திறனுடன் 6.7-இன்ச் HD+ LCD பேனலைக் கொண்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே 800 நிட்ஸ் உச்ச பிரகாச நிலையுடன் வருகிறது. இந்த போன் 6GB வரை LPDDR4x RAM மற்றும் 128GB வரை இன்டெர்னல் ஸ்டோரேஜூடன் வருகிறது. நிறுவனம் Dimensity 6300 சிப்செட்டை செயலியாக வழங்குகிறது. புகைப்படம் எடுப்பதற்கு, இந்த ஸ்மார்ட்போன் LED ஃபிளாஷ் கொண்ட இரட்டை கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் 50-மெகாபிக்சல் முதன்மை லென்ஸ் மற்றும் 2-மெகாபிக்சல் டீப் சென்சார் ஆகியவை அடங்கும். செல்ஃபி எடுப்பதற்க்கு, நிறுவனம் 8-மெகாபிக்சல் முன் கேமராவை வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது மற்றும் 25W வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கிறது.

OS-ஐப் பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போன் Android 15 ஐ அடிப்படையாகக் கொண்ட OneUI 7 இல் இயங்குகிறது. பயோமெட்ரிக் பாதுகாப்பிற்காக, இந்த ஸ்மார்ட்போனில் கைரேகை சென்சார் உள்ளது. இணைப்பிற்காக, இந்த ஸ்மார்ட்போனில் 5G, Wi-Fi 802.11 ac (2.4GHz + 5GHz), ப்ளூடூத் 5.3, GPS, USB டைப்-C போர்ட் மற்றும் 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் போன்ற விருப்பங்கள் வழங்கப்பட்டுள்ளது.

About the Author


Vijaya Lakshmi

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.