பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காஞ்சிபுரம் ஏகனாபுரம் கிராமத்தில் கிராம சபைக் கூட்டத்தில் 15-வது முறையாக பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றினர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தை நாடவும் முடிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழு தலைவர் ஜி.சுப்பிரமணியன், செயலர் எஸ்.டி.கதிரேசன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை:
பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்துக்காக ஏகனாபுரம் மக்கள் தங்களுடைய விவசாய நிலத்தையும், பாரம்பரியமான பூர்வீக குடியிருப்புகளை ஒருநாளும் விட்டு கொடுக்க மாட்டோம் என்ற உறுதியான நிலைப்பாட்டில் உள்ளதால் போராட்ட குழுவின் சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு பதிவு செய்ய முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வதந்திகளை நம்ப வேண்டாம்: இந்த வழக்கு விசாரணைக்கு வரும் போது போராடும் மக்களுக்கு நல்ல தீர்ப்பு வரும். போராட்டக் குழு நீதிமன்றத்தை நாடி உள்ள நிலையில் அரசு அதிகாரிகள் நம்முடைய ஏகனாபுரம் ,கிராம மக்கள் மத்தியில் இன்னும் 4 நாட்களில் உங்களுடைய நிலத்தின் பத்திரங்களை ஒப்படைக்க பட வேண்டும் என்ற பொய் தகவல்களை சிலர் பரப்பி வருகின்றனர்.
இது போன்ற அரசு அதிகாரிகளால் பரப்பபடும் பொய்யான தகவல்களை பொதுமக்கள் நம்பி மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குன்றத்தூர் ஒன்றியம்,அய்யப் பன்தாங்கல் ஊராட்சியில் நடை பெற்ற கிராம சபை கூட்டத்தில், அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்றார். இதில் ஆட்சியர் கலைச்செல்வி, எம்.பி. டி.ஆர். பாலு உட்பட பலர் பங்கேற்றனர். செங்கல்பட்டு மாவட்டத்தில்
359 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. சிங்கப் பெருமாள் கோவில் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத் தில் ஆட்சியர் சினேகா, எம்எல்ஏ வரலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தாம்பரம் அருகே முடிச்சூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தாம்பரம் எம்.எல்.ஏ எஸ்.ஆர் ராஜா பங்கேற்றார். கோவளம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்துக்கு ஊராட்சி மன்ற தலைவர் சோபனா தங்கம் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டா லின் காணொலி காட்சி மூலம் நேரடியாக ஊராட்சி மன்ற தலை வருடன் உரையாற்றினார்.