"பா.இரஞ்சித்தின் தயாரிப்பில் அடுத்த படம்" – கலைமாமணி விருது பெற்ற நடிகர் மணிகண்டன் கொடுத்த அப்டேட்

நேற்று சென்னை கலைவாணர் அரங்கில் தமிழக அரசின் ‘கலைமாமணி’ விருது விழா நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி விருதாளர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பித்தனர்.

2021, 2022 மற்றும் 2023 ஆண்டுகளுக்கான இவ்விருதுகள் நடிகர் மணிகண்டன், நடிகர் ஜார்ஜ் மரியன், இசையமைப்பாளர் அனிருத், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, பின்னணி பாடகி ஸ்வேதா மோகன், நடிகர் விக்ரம் பிரபு, நடிகர் ஜெயா வி.சி. குகநாதன், பாடலாசிரியர் விவேகா, நடிகர் எஸ்.ஜே. சூர்யா, நடிகை சாய் பல்லவி, இயக்குநர் லிங்குசாமி, சண்டைப் பயிற்சியாளர் சூப்பர் சுப்புராயன் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டன.

சாய் பல்லவி, SJ சூர்யா, அனிருத்
சாய் பல்லவி, SJ சூர்யா, அனிருத்

முதல்வர் ஸ்டாலின் கைகளால் 2023ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருதைப் பெற்ற நடிகர் மணிகண்டன் செய்தியாளர் சந்திப்பில், “இந்த கலைமாமணி விருதை வழங்கும்போது முதல்வர் ஸ்டாலின் அவர்கள், ‘தமிழ்நாடு அரசு வழங்கும் இந்தக் கலைமாமணி விருது என்பது ‘தாயின் முத்தம்’.

சர்வதேசம், தேசிய அளவில் விருதுகளைப் பெற்றாலும் இந்த விருது தாயின் முத்தத்தைப் போன்றது’ என்று கலைஞர் குறிப்பிட்டதைச் சொன்னார். அவர் சொன்னதுபோல இவ்விருது எனக்கு தாயின் முத்தத்தைப் போன்றதுதான்.

90 வயது முதல் எங்களைப் போன்ற இளம் கலைஞர்கள் வரை இந்த விருது வழங்கப்பட்டிருப்பது இந்த ஆண்டு கலைமாமணி விருது விழாவின் சிறப்பு.

கலைமாமணி மணிகண்டன், ஸ்டாலின்
கலைமாமணி மணிகண்டன், ஸ்டாலின்

அடுத்தடுத்து இரண்டு திரைப்படங்கள் பேச்சுவார்த்தையில் இருக்கின்றன. அது பற்றி அதிகாரப்பூர்வமான நகர்வுகள் ஏதுமில்லை. இப்போதைக்கு பா.இரஞ்சித்தின் நீலம் தயாரிப்பில் ஒரு படத்தின் நடிக்கவிருக்கிறேன். அடுத்தடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இனிமேல் வரும்” என்று பேசியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.