காபூல்,
ஆப்கானிஸ்தான் – வங்காளதேசம் இடையிலான 3டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் முத்லைல் நடைபெற்ற டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் வங்காளதேசம் வென்றது. தொடர்ந்து இவ்விரு அணிகள் இடையிலான ஒருநாள் தொடரின் முதல் இரு ஆட்டங்களில் முடிவில் 2-0 என ஆப்கானிஸ்தான் முன்னிலையில் உள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி வரும் 14ம் தேதி நடக்கிறது. இந்நிலையில், இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் முன்னணி வீரரான ரஹ்மத் ஷா ஆடுவதில் சந்தேகம் நிலவுகிறது. 2வது போட்டியின் போது அவருக்கு காலில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் 3வது போட்டியில் ஆடுவாரா? என்பதில் சந்தேகம் நிலவுகிறது.