2024-ம் ஆண்டின் சிறந்த படத்தொகுப்பாளர் ‘கார்த்திகை தீபம்’ எஸ்.அருள்!

2024-ம் ஆண்டுக்கான சிறந்த படத்தொகுப்பாளர் விருது ‘கார்த்திகை தீபம்’ தொடரின் படத்தொகுப்பாளர் எஸ். அருளுக்கு வழங்கப்பட்டது. விருதை சின்னத்திரை நடிகர் சங்கத் தலைவர் பரத் வழங்க எஸ். அருள் பெற்றுக் கொண்டார்.
“ட்ரம்ப் கையால வாங்கியிருந்தா கூட சஷ்தோஷப்பட்டிருக்க மாட்டேன்” – `சிறகடிக்க ஆசை’ சம்பத்குமார்
2024-ம் ஆண்டின் சிறந்த திரைக்கதையாசிரியர் விருது, ‘சிறகடிக்க ஆசை’ தொடரின் திரைக்கதைக்காக குரு சம்பத்குமாருக்கு வழங்கப்பட்டது. இயக்குநர் பாஸ்கர் சக்தி விருது வழங்க, சம்பத்குமார் பெற்றுக்கொண்டார்.
விருதை பெற்றுக்கொண்டு பேசிய குரு சம்பத்குமார், “விகடனில் நாம் எழுதிய கதை வருவதே பெருமை, விகடன் விருதே கிடைத்திருப்பது பெரிய பெருமையாக இருக்கு.
ட்ரம்ப் கையால இந்த விருது வாங்கியிருந்தா கூட நான் சஷ்தோஷப்பட்டிருக்க மாட்டேன், பாஸ்கர் சக்தி, குமரன் கைகளால இந்த விருதை வாங்கியதில் ரொம்ப சந்தோஷம்.

ஒருமுறை, மருந்து கடைக்கு மருந்து வாங்கப்போன கூட சிறகடிக்க ஆசை சீரியல் திரைக்கதை ஆசிரியர்தானே நீங்கனு, அடையாளம் கண்டுபிடிச்சி பாராட்டுனாங்க. அதெல்லாம் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு” என்று கூறினார்.
மேலும், இயக்குநர் பாஸ்கர் சக்தி பேசுகையில், அடுத்து த்ரில்லர் படத்தை இயக்கப்போவதாக அப்டேட் கொடுத்தார்.
விகடன் சின்னத்திரை விருதுகள்!




2024-ம் ஆண்டுக்கான விகடன் சின்னத்திரை விருதுகள் விழா சென்னையில் இன்று மாலை 5 மணியளவில் தொடங்கியது.