“கலைமாமணி விருதை பகிர்ந்து நிற்கிறோம்'' – டீக்கடை சந்திப்பை ரீக்ரியேட் செய்த மணிகண்டன், சாண்டி

தமிழ்நாடு அரசின் உயரிய கலை விருதான ‘கலைமாமணி’ விருதுகள் நேற்று முன்தினம் (அக்டோபர் 11) சென்னையின் கலைவாணர் அரங்கில் கோலாகலமாக வழங்கப்பட்டன.

2021, 2022 மற்றும் 2023 ஆண்டுகளுக்கான விருதுகள் ஒரே விழாவில் வழங்கப்பட்டன. இதில் நடிகர் மணிகண்டனும், டான்ஸ் மாஸ்டர் சாண்டியும் விருது பெற்றனர்.

மணிகண்டன் - சாண்டி மாஸ்டர்
மணிகண்டன் – சாண்டி மாஸ்டர்

கலைமாமணி விருதைப் பெற்றவுடன் டீக்கடை சந்திப்பை இருவரும் ரீக்ரியேட் செய்திருக்கின்றனர்.

இதுதொடர்பான வீடியோவை அவர்கள் தங்களது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டிருக்கின்றனர்.

அவர்கள் வெளியிட்டிருக்கும் பதிவில், “நாம் ஒரே கனவின் விதைகளை இரண்டு மண்ணில் விதைத்தோம். ஒரே இடத்தில் தொடங்கிய நாம், வெவ்வேறு பாதைகளில் நடந்தோம்.

அந்தக் கனவில் நாம் வேரூன்றி, நீண்ட தூரம் வந்து சேர்ந்திருக்கிறோம். இன்று இந்த மேடையில்…

மணிகண்டன் - சாண்டி மாஸ்டர்
மணிகண்டன் – சாண்டி மாஸ்டர்

வெற்றியின் வெளிச்சத்தில் கலைமாமணி விருதை பகிர்ந்து நிற்கிறோம். நம் பயணங்கள் வேறாக இருந்தாலும், இலக்கு ஒன்றே.

நட்பு தூரத்தாலும் துன்பங்களாலும் தொலையாது என்பதை காலம் நினைவூட்டுகிறது… ” என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கின்றனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.