டெல்லி,
கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் கோபிநாதன் (வயது 39). இவர் தாத்ரா மற்றும் நகர் அவேலி யூனியன் பிரதேசத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக செயல்பட்டு வந்தார். இவர் 2018ம் ஆண்டு கேரள வெள்ள மீட்பு பணியில் தன்னார்வலராக செயல்பட்டு பலரின் பாராட்டுகளை பெற்றார்.
இதனிடையே, ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டத்தை 2019ம் ஆண்டு மத்திய அரசு நீக்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கண்ணன் கோபிநாந்த் ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின் சமூக ஆர்வலராக செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் கோபிநாத் இன்று காங்கிரசில் இணைந்தார். டெல்லியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் முன்னிலையில் கோபிநாத் காங்கிரசில் இணைந்தார்.