IPL 2026: அடுத்த ஆண்டு ஏப்ரல் மே மாதத்தில் ஐபிஎல் 2026 தொடர் தொடங்க இருக்கிறது. இத்தொடருக்கான எதிர்பார்ப்பு தற்போதே அதிகரிக்க தொடங்கி இருக்கின்றன. காரணம், வரும் டிசம்பர் மாதம் இத்தொடருக்கான மினி ஏலம் நடைபெற இருப்பதுதான். இதனை முன்னிட்டு ஐபிஎல் அணிகளில் தங்களுக்கு தேவையான வீரர்களை தக்க வைத்துக் கொண்டு தேவையில்லாத வீரர்களை விடுவிக்கும். இதற்கு அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன.
Add Zee News as a Preferred Source
ஐபிஎல் அணிகள் தங்களின் அணியில் இருந்து வீரர்களை விடுவிக்க இருந்தாலும். ஒரு சில வீரர்கள் தாங்களாக்வே அணியில் இருந்து விலகும் முடிவில் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. ஏற்கனவே கடந்த 2025 ஐபிஎல் தொடரின் முடிவின்போதே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு அவருக்கும் மனகசப்பு ஏற்பட்டதால் சாம்சன் இந்த முடிவை எடுத்ததாகவும் கூறப்பட்டது.
அதேபோல், சஞ்சு சாம்சனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மினி ஏலத்தில் எடுக்க திட்டமிட்டு, இதற்கான பேச்சுவார்த்தியில் ஆர்ஆர்-யுடன் ஈடுபட்டதாகவும் ஆனால் அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாகவும் கூறப்பட்டட்து. சஞ்சு சாம் விலகுவதை தாண்டி ரியான் பராக்கை அந்த அணி கேப்டனாக நியமிக்க திட்டமிடுவதாகவும் அப்பதவிக்கு ஜெய்ஸ்வால் போட்டி போடுவதாகவும் தகவல்கள் வெளியாகின. இப்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஏகப்பட்ட குழப்பங்கள் உள்ளன.
விலகும் மற்றொரு முக்கிய வீரர்
இந்த நிலையில், அந்த அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான துரூவ் ஜுரேலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த ஐபிஎல் மெகா ஏலத்தின் போது, துரூவ் ஜுரேல் அந்த அணியால் ரூ. 14 கோடிக்கு தக்க வைக்கப்பட்டார். இந்த சூழலில், தற்போது அவர் அந்த அணியில் இருந்து விலக உள்ளதாக கூறப்படுகிறது. மேலும்,ஏற்கனவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் விலகுவதாக கூறப்படும் நிலையில், அவரை தொடர்ந்து முக்கிய வீரராக இருக்கும் துரூவ் ஜுரேலும் விலக இருப்பதாக தகவல் வெளியானது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
About the Author
R Balaji