டாடா சன்ஸ் மற்றும் டாடா குழும நிறுவனங்களின் தலைவராக உள்ள என். சந்திரசேகரின் பதவிக்காலம் மூன்றாவது முறை நீட்டிக்கப்படும் என்று தி எக்கனாமிக் டைம்ஸ் தெரிவித்துள்ளது. டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) அனுபவமுள்ள என். சந்திரசேகரன், 2016-ஆம் ஆண்டு அக்டோபரில் டாடா சன்ஸ் குழுவில் சேர்ந்தார் இதையடுத்து ஜனவரி 2017 இல் இக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். 2022 பிப்ரவரியில் இவருக்கு இரண்டாவது ஐந்தாண்டு பதவிக்காலம் வழங்கப்பட்டது. டாடா குழும நிறுவன விதிகளின்படி நிர்வாக பொறுப்புள்ள தலைவர்கள் 65 […]
