லாகூர்,
தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 இருபது ஓவர், 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. தென்ஆப்பிரிக்கா- பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லாகூரில் இன்று தொடங்கியது .
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஷான் மஸாத் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி , அப்துல்லா ஷபிக், இமாம்-உல்-ஹக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
ஷபிக் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து ஷான் மஸாத் இமாம்-உல்-ஹக் உடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இமாம்-உல்-ஹக் 93 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஷான் மஸாத் 76 ரன்னில் ஆட்டமிழந்தார்.
பாபர் அசாம் (23), சாத் ஷகீல் (0) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அடுத் ரிஸ்வான் உடன் சல்மான் ஆகா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமாக விளையாடியது.
இதனால் பாகிஸ்தான் முதல்நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 313 ரன்கள் குவித்துள்ளது.ரிஸ்வான் 62 ரன்களுடனும், சல்மன் ஆகா 52 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.