புதுடெல்லி,
புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. தற்போது டெல்லியில் லீக் ஆட்டங்கள் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடக்கிறது.
அதன்படி இரவு 8 மணிக்கு தொடங்கிய முதல் ஆட்டத்தில் தபாங் டெல்லி – புனேரி பால்டன் அணிகள் மோதின. பரபரப்பான இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் சிறப்பாக விளையாடின. இதனால் போட்டி 38-38 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது.
தொடர்ந்து டை பிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் 6-5 என்ற புள்ளிகள் கணக்கில் புனேரி பால்டன் அணி பெற்றது .
Related Tags :