Rohit Sharma And Virat Kohli: இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இத்தொடர் நாளையுடன் நிறைவு பெறுகிறது. இதனை முடித்த கையோடு இந்திய அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு அந்நாட்டு அணியுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரும் விளையாட இருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அணி மட்டும் கடந்த சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது.
Add Zee News as a Preferred Source
சந்தேகத்தில் ரோகித், விராட் இடம்
அதில் ரோகித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கிவிட்டு சுப்மன் கில்லை நியமித்திருந்தனர். அதன் காரணமாக தென்னாப்பிரிக்காவில் 2027ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் விளையாடுவார்களா என்பது கேள்விக்குறியாகி உள்ளது. ஏனென்றால், இருவருக்கும் 2027ல் 40 வயது நெருங்கிவிடும் என்பதாக் இந்த கேள்வி எழுந்துள்ளது.
ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சம்பியன்ஸ் டிராபி தொடரில் அசத்தி இருந்தனர். இருவருமே தாம் சாம்பியன் பிளேயர் என்பதை நிருபிக்கும் விதமாக விராட் கோலி அரை இறுதி போட்டியிலும் ரோகித் சர்மா இறுதி போட்டியிலும் ஆட்ட நாயகன் விருது பெற்றனர்.இருப்பினும் இருவருக்கும் தற்போது இந்திய அணியில் தொடர்ந்து நீட்டிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.அவர்களின் இடம் சந்தேகத்திற்குறியதாகவே இருக்கிறது. இந்த நிலையில், 2027 உலகக் கோப்பையில் இந்திய அணி வெல்ல வேண்டும் என்றால் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் விளையாட வேண்டும் என முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.
முகமது கைஃப் கருத்து
இது தொடர்பாக பேசிய அவர், ரோகித் சர்மா நிச்சயம் உலக கோப்பையில் விளையாடுவார். கேப்டன் பதவி இல்லாவிட்டாலும் அவர் தொடக்க வீரராக சிறப்பாக விளையாடுவார் என நான் நம்புகிறேன். தென்னாப்பிரிக்காவுக்கு செல்லும் நீங்கள் இளம் அணியுடன் செல்ல முடியாது. கண்டிப்பாக அனுபவம் மிகுந்த வீரர்கள் தேவை. ஏனென்றால், சில நேரங்களில் பவுன்ஸுக்கு சாதகமாக ஆடுகளங்கள் இருந்தால், அது உங்களுடைய இளம் வீரர்களுக்கு தடுமாற்றத்தை கொடுக்கலாம்.
ரோகித், விராட் கண்டிப்பாக தேவை
நீங்கள் புதிய வீரர்களை கொண்டு சென்றால் உங்களின் தடுமாற்றம் அப்பட்டமாக தெரியக்கூடும். பவுன்ஸ் பந்துகளை ஃபுல் மற்றும் ஃகட் ஷாட்டுகளாக அடிக்கக்கூடிய அனுபவம் மிகுந்த ரோகித் சர்மா போன்ற வீரர் உங்களுக்கு தேவை. உலகக் கோப்பை போன்ற ஒரு பெரிய தொடரில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா போன்ற அனுபவம் மிகுந்த வீரர்கள் வேண்டும். தொடரின் ஒரிரு போட்டிகளில் நீங்கள் தோற்றாலும் கூட அவர்கள் இருந்தால் உங்களால் கம்பெக் கொடுக்க முடியும் என முகமது கைஃப் கூறினார்.
About the Author
R Balaji