மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் பைசன் – களமாடன். இதன் வெளியீட்டுக்கு முன்னான விழா நேற்றையதினம் (அக்டோபர் 12) சென்னையில் நடைபெற்றது.
பா.ரஞ்சித்தின் நீலம் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி, லால், அமீர், மதன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
Bison விழா – பசுபதி பேச்சு

பைசன் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள பசுபதி, தனது அனுபவம் குறித்துப் பேசியுள்ளார். அவர் பேசியதாவது, “எல்லாப் புகழும் இயக்குநருக்கே. இயக்குநர் இல்லாம சினிமாவுல ஒரு நடிகனால ஒரு அடி கூட எடுத்துவைக்க முடியாது.
எனக்கு ஒவ்வொரு படமும் முதல் படம் மாதிரிதான். நாளைக்கு ஷூட்டிங் போகணும்னா முதல் நாள் ஜுரம் வந்திடும். வயிறு சரியில்லாம போயிடும். முதல் நாள்ல ரொம்ப பயந்துகிட்டே இருப்பேன். ஒவ்வொரு நேரமும் நான் என்ன பண்ண போறேன் என்ன பண்ண போறேன்னு பயந்துகிட்டே இருப்பேன். எப்போதுமே அதை நிறைவேற்றுவது இயக்குநர் தான்.
லால் சாருடைய வாய்ஸ் ரொம்ப சிறப்பானது. அடி வயிற்றிலிருந்து அது வரும், எங்கேயோ இருந்து எமோஷன் சார் எடுத்துட்டு வருவாரு.
மதன் கூட எனக்கு நிறைய காட்சிகள் இருந்தன. Fantastic ஆக்டர் அவர். அதுக்காக மாரிக்கு தான் நன்றி சொல்லணும் . அவர் நடிக்கிறத பாத்து எனக்கு நாமும் நல்லா பண்ணனும்னு போட்டி மனப்பான்மை வரும்.
ரஜிஷா… உண்மையாவே நான் உனக்கு அப்பாதான். ஸ்பாட்ல அப்படித்தான் ஃபீல் பண்ணேன் .
அனுபமா கூட எனக்கு ஒரு சீன் இருந்தது. அவங்களுக்கு கல்யாணம் ஆகப்போகிற மாதிரி ஒரு சீன். அதில் எமோஷனல ஒன்னு பண்ணியிருப்பாங்க. நான் ‘கலக்குறா இந்த பொண்ணு’ அப்படின்னு மாரிகிட்ட சொன்னேன். அடுத்த சீன் எனக்கு டயலாக் வரல.
துருவ் விக்ரம் கபடி ஆடினத பாத்து மிரண்டுட்டேன். நமக்கு நடிக்கிறதைத் தவிர வேற தொழில் தெரியாது. ஆனா துருவ் விக்ரம் இனி அப்படி இல்ல, கபடி கூட ஆடிப்பாரு. இந்த படம் பாத்து நேஷனல் கேம்ஸ்ல இருந்து கூப்பிட்டாலும் கூப்பிடுவாங்க.
நீலம் நம்ம ஃபேமிலி புரொடக்ஷன் மாதிரி. என்னுடைய குடும்பப் படமாகத்தான் இதைப் பாக்குறேன். வேலை செய்யிற சூழல் அப்படித்தான் இருக்கும். எல்லா அசிஸ்டன்ட் டைரக்டரும் பேய் மாதிரி வேலை செஞ்சாங்க. ஏன்னா மாரி ஒரு பெரிய பேய்.” எனப் பேசினார். (துணை இயக்குநர்கள் அனைவரையும் மேடைக்கு ஏற்றி நன்றி சொன்னார், அவர்கள் கையால் நினைவுப் பரிசும் பெற்றுக்கொண்டார்).