BSNL பயனரா நீங்கள்? ₹99-க்கு இவ்ளோ நாள் சிம் ஆக்டிவ்-ஆ இருக்குமா! மிஸ் பண்ணாதீங்க!

BSNL Rs 99 Prepaid Plan: பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சமீபத்திய வளர்ச்சி அபரிமிதமானது. ‘போன மாதம், இந்த மாதம்’ என்று பிரித்துப் பார்க்கும் அளவுக்கு அதன் முன்னேற்றம் தெளிவாகத் தெரிகிறது. பான் இந்தியா 4ஜி சேவை, பான் இந்தியா இ-சிம் சேவை, வோவைஃபை (VoWiFi) காலிங் சேவையின் விரிவாக்கம், ஏர்டெல் நிறுவனத்தை விஞ்சும் அளவுக்கு அதிக புதிய பயனர்களைச் சேர்த்தது எனப் பல முனைகளிலும் பிஎஸ்என்எல் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.

Add Zee News as a Preferred Source

இந்த இடத்தில் தற்போது வரையிலாக “மொக்கையான ரீசார்ஜ்களாக” பார்க்கப்பட்ட சில பிஎஸ்என்எல் திட்டங்கள் டெலிகாம் சந்தையில் கிடைக்கும் “சிறந்த திட்டங்களாக” மாறியுள்ளன. அவற்றில் ஒன்றுதான் ரூ.99 க்கு ரீசார்ஜ் திட்டமாகும். இதனால் இது பிஎஸ்என்எல் ரீசார்ஜின் என்ட்ரி லெவல் பிளான் ஆகும். இது ரூ.100 க்கும் குறைவான விலையில் சிம் கார்ட்டை செயல்பாட்டில் வைத்துக்கொள்ள விரும்பும் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான திட்டமாகும்.

பிஎஸ்என்எல் ரூ.99 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.99 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகளை பற்றி பேசுகையில், இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் மற்றும் அன்லிமிட்ட் டேட்டா இரண்டையும் பெறலாம். அதுமட்டுமின்றி இதன் கீழ் 50எம்பி டேட்டா மட்டுமே ஹை-ஸ்பீட் டேட்டாவாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு 40 கேபிபிஎஸ் என்கிற ஸ்பீடின் கீழ் டேட்டா கிடைக்கும். இதற்கான அர்த்தம் என்னவென்றால் உங்களுக்கு அதிக டேட்டா தேவை இருந்தாலோ அல்லது ஹைஸ்பீட் டேட்டா தேவைப்பட்டாலோ இந்த திட்டம் உங்களுக்கு சரியானதல்ல. மறுபுறம் மலிவான விலைக்கு, வாய்ஸ் கால் நண்மைகள் மட்டுமே உங்களுக்கு தேவைப்பட்டால் அல்லது ரூ.100 க்குள் என்கிற பட்ஜெட்டில் உங்கள் சிம் கார்ட்டை ஆக்டிவ் ஆக வைத்திருக்க விரும்பினால் இந்த திட்டம் மிகவும் சிறந்த திட்டமாக இருக்கும். அதுமட்டுமின்றி பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.99 திட்டத்துடன் இணைக்கப்பட்ட சர்வீஸ் வேலிடிட்டி 15 நாட்கள் ஆகும்.

அரசுக்கு சொந்தமான டெலிகாம் ஆப்ரேட்டரான பிஎஸ்என்எல் கடந்த 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் புதிய மொபைல் வாடிக்கையாளர் சேர்க்கையில் பாரதி ஏர்டெல்லை (Airtel) முந்தியுள்ளது. 3 மடங்கு அதிக எண்ணிக்கையிலான புதிய கஸ்டமர்களை பிஎஸ்என்எல் இல் சேர்த்துள்ளது.

இதனிடையே அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் – பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனம் தனது பயனர்களுக்கு 5ஜி சேவையை வழங்க உறுதியலித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அனைத்து பிஎஸ்என்எல் 4ஜி டவர்களும் அடுத்த 6 முதல் 8 மாதங்களுக்குள் 5ஜிக்கு மேம்படுத்தப்படும் என்று மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா உறுதிப்படுத்தியுள்ளார்.

நாடு முழுவதும் இதுவரை பிஎஸ்என்எல்லின் உள்நாட்டு தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட 92,564 மொபைல் டவர்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த விரைவான முன்னேற்றம் இந்தியாவை உலகின் வேகமான 5ஜி சேவை செயல்படுத்தும் நாடாக மற்றுவது ஆகும், 5ஜி டவர்கள் 99.8% மாவட்டங்களை உள்ளடக்கியது. அமைச்சர் சிந்தியாவின் கூற்றுப்படி, பிஎஸ்என்எல்லின் 5ஜி நெட்வொர்க் சுயசார்பு இந்தியாவை நோக்கிய ஒரு முக்கிய படியாகக் கருதப்படுகிறது. நிறுவனத்தின் தற்போதைய 4ஜி நெட்வொர்க் ஏற்கனவே 5ஜி-தயாராக உள்ளது, எனவே டவர் மேம்படுத்தல் செயல்முறைக்கு அதிக நேரமோ முயற்சியோ தேவையில்லை என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

About the Author


Vijaya Lakshmi

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.