சென்னை; இன்றுமுதல் சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்து உள்ளார். அதுபோல சென்னை வானிலை ஆய்வு மையமும் இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. “தெற்கு கடலோர ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரள கடலோர பகுதிகள் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு […]
