மஹிந்திரா பொலிரோ எஸ்யூவி விலை, என்ஜின், மைலேஜ் மற்றும் வசதிகள் | Mahindra Bolero SUV on-road Price and specs

இந்தியாவின் மிகவும் பிரசத்தி பெற்ற மஹிந்திரா பொலிரோ மாடலின் புதிய அம்சங்கள், ஆன்-ரோடு விலை ரூ.9.64 லட்சம் முதல் துவங்கி ரூ.11.68 லட்சம் வரை அமைந்துள்ள நிலையி்ல் என்ஜின், வேரியண்ட், நிறங்கள் மற்றும் சிறப்புகளை அறியலாம்.

Mahindra Bolero SUV

அனைத்து விதமான சாலைகளுக்கு ஏற்ற வடிவமைப்பினை பெற்று லேடர் ஃபிரேமினை பெற்று ரியர் வீல் டிரைவினை கொண்டு 7 இருக்கைகள், சிறப்பான இடவசதி, பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட டிசைன் என பலவற்றுடன் டீசல் என்ஜின் கொண்டிருக்கின்ற பொலிரோ எஸ்யூவியில் நவீன தலைமுறையினர் விரும்பும் அகலமான தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், சன்ரூஃப் ஆகியவற்றுடன் கூடுதலாக பாதுகாப்பு சார்ந்த 6 ஏர்பேக்குகள் கூட வழங்கப்படவில்லை, ஆனாலும் சிறப்பான மாடலாக உள்ளது.

3600rpm-ல் 75BHP பவரை வெளிப்படுத்தும் மூன்று சிலிண்டர் 1.5 லிட்டர் டீசல் எம் ஹாக் 75 என்ஜின் பொருத்தப்பட்டு 1600-2200rpm-ல் 210Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில், 5 வேக மேனுவல் கியர்பாக்ஸூடன் கிடைக்கின்றது. இந்த காரில் ஆட்டோமேட்டிக் ஆப்ஷன் இல்லை

new mahindra bolero interiornew mahindra bolero interior.

Mahindra Bolero on-road Price in Tamil Nadu

இந்த மஹிந்திரா பொலிரோ எஸ்யூவி ஆன்-ரோடு விலை B4 வேரியண்ட் ரூ.9,63,890 முதல் துவங்கி டாப் B8 அலாய் வீல் பெற்ற வேரியண்ட் ரூ.11,67,670 வரை அமைந்துள்ளது.

Bolero விலை Ex-showroom on-road price
1.5l Diesel B4 ₹ 7,99,000 ₹ 9,63,890
1.5l Diesel B6 ₹ 8,69,000 ₹ 10,47,908
1.5L Diesel B6 (O) ₹ 9,09,000 ₹ 10,92,987
1.5L Diesel B8 ₹ 9,69,000 ₹ 11,67,670

கொடுக்கப்பட்டுள்ள ஆன்ரோடு விலையில், காப்பீடு, ஆர்டிஓ மற்றும் ஆர்டிஓ கட்டணங்கள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், கூடுதல் ஆக்செரீஸ் சேர்க்கப்படவில்லை, முழுவிபரங்களுக்கு டீலரை அனுகுங்கள்.

மஹிந்திரா பொலிரோ என்ஜின், மைலேஜ் விபரம்

 75BHP பவரை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் எம் ஹாக் 75 என்ஜின் பொருத்தப்பட்டு 210Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில், 5 வேக மேனுவல் கியர்பாக்ஸூடன் உள்ள நிலையில் இதன் மைலேஜ் லிட்டருக்கு 13 கிமீ முதல் 16 கிமீ வரை கிடைக்கின்றது.

வேரியண்ட் மற்றும் வசதிகள்

அடிப்படையில் அனைத்து பொலிரோ வேரியண்டுகளிலும் 2 ஏர்பேக்குகள், EBD உடன் கூடிய ABS, ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், முன் மற்றும் இரண்டாவது வரிசைகளுக்கான சீட்பெல்ட் நினைவூட்டல்கள், கதவில் பொருத்தப்பட்டு ஸ்பேர் வீல் கவர், மற்றும் பவர் ஸ்டீயரிங் கொண்டுள்ளது.

B4 Bolero வகையில்

  • எஞ்சின் ஆட்டோ ஸ்டார்ட்-ஸ்டாப்
  • MID உடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர்
  • வினைல் அப்ஹோல்ஸ்டரி
  • மடிக்கக்கூடிய மூன்றாவது வரிசை இருக்கை
  • கதவுகளில் பாட்டில் ஹோல்டர்கள்

B6 Bolero வகையில்

  • பவர்டு ஜன்னல்கள்
  • ரிமோட் கொண்ட சாவி
  • துணி அப்ஹோல்ஸ்டரி
  • சென்ட்ரல் லாக்கிங்
  •  சில்வர் வீல் கவர்கள்
  • இன்ஃபோடெயின்மென்ட் டச்ஸ்கிரீன்
  • 12V சார்ஜிங் போர்ட்
  • USB டைப்-சி சார்ஜிங் போர்ட்
  • ஸ்டியரிங் பொருத்தப்பட்ட கட்டுப்பாடுகள்

mahindra bolero featuresmahindra bolero features

B6 (O) Bolero வகையில்

B6 (O) வகையில் கூடுதலாக

  • கார்னரிங் விளக்குகள்
  • ஓட்டுநர் தகவல் அமைப்பு
  • பின்புற வாஷர் மற்றும் வைப்பர்
  • மூடுபனி விளக்குகள்

B8 Bolero வகையில்

டாப் வேரியண்டில் 16-இன்ச் அலாய் வீல்கள், முன்புற பம்பர் கிரிலில் க்ரோம் பூச்சு, லெதர்ரெட் அப்ஹோல்ஸ்டரி உள்ளது.

போட்டியாளர்கள்

4 மீட்டருக்கு குறைந்த நீளமுள்ள பிரிவில் நேரடியான போட்டியாளர்கள் இல்லையென்றாலும் பொலிரோ நியோ தவிர மற்ற 10 லட்ச ரூபாய்க்கு குறைந்த விலையில் கிடைக்கின்ற காம்பேக்ட் எஸ்யூவிகளை எதிர்கொள்ளுகின்றது.

Mahindra Bolero SUV Gallery

 

Related Motor News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.