ம.பி.யில் குழந்தைகளுக்கு பரிந்துரை செய்த ஒவ்வொரு இருமல் மருந்து பாட்டிலுக்கும் 10% கமிஷன் பெற்ற மருத்துவர்

போபால்: மத்​திய பிரதேசத்​தில் கோல்​டிரிப் இரு​மல் மருந்தை மருத்துவர்​கள் பரிந்​துரைத்​த​தில் 23 குழந்​தைகள் உயி​ரிழந்தனர். இதனை பரிந்​துரை செய்தவற்கு கமிஷ​னாக மருத்​து​வருக்கு பாட்​டிலுக்கு 10 சதவீத கமிஷன் வழங்​கப்​பட்​டது விசா​ரணை​யில் தெரிய​வந்​துள்​ளது.

இதுகுறித்து புல​னாய்வு அதிகாரி​கள் கூறிய​தாவது: மத்​திய பிரதேசத்​தில் குழந்​தைகளுக்கு தொடர்ச்​சி​யாக இரு​மல் மருந்தை பரிந்​துரை செய்​த​தில் 23 குழந்​தைகள் உயி​ரிழந்​தனர். இதுதொடர்​பாக நடத்​தப்​பட்ட விசா​ரணை​யில் பாரசியா அரசு சுகா​தார மையத்​தில் பணிபுரி​யும் குழந்​தைகள் நல மருத்​து​வர் பிர​வீன் சோனி கைது செய்​யப்​பட்​டுள்​ளார்.

4 வயதுக்​கும் குறை​வான குழந்​தைகளுக்கு தொடர்ச்​சி​யாக இந்த மருந்தை பரிந்​துரை செய்​வதற்கு தடை இருந்​த​போதி​லும் கமிஷனுக்​காக குழந்தைகளுக்கு இந்த மருந்தை எழு​திக்​கொடுத்​துள்​ளார். அவர் பரிந்​துரைத்த கோல்​டிரிப் இரு​மல் மருந்​தின் விலை ரூ.24.54-ஆக இருந்த நிலை​யில் 10 சதவீத கமிஷன் தொகை அதாவது ரூ.2.54-ஐ ஸ்ரேசன் பார்​மசூட்​டிகல்ஸ் அந்த மருத்​து​வருக்கு வழங்​கி​யுள்​ளது.

மீண்​டும், மீண்​டும் பரிந்துரை: கோல்​டிரிப் சிரப்​பில் அனு​ம​திக்​கப்​பட்ட வரம்​பு​களுக்கு அப்​பால் இருக்​கும் நச்​சுத்​தன்மை வாய்ந்த டைஎ​திலீன் கிளை​கோல் சிறுநீரக செயலிழப்பை ஏற்​படுத்​தும் என்ற அபா​யத்தை மருத்​து​வர் பிர​வீன் சோனி அறிந்​திருந்​தும் மீண்​டும், மீண்​டும் அந்த மருந்தை நோ​யாளி​களுக்கு பரிந்​துரை செய்​துள்​ளார். இவ்​வாறு அதி​காரி​கள் தெர​வித்​துள்​ளனர்.

ஆனால், மருத்​து​வர் பிரவீன் சோனி​யின் மீது நீதி​மன்​றத்​தில் சுமத்​தப்​பட்ட இந்த குற்​றச்​சாட்டை அவரது வழக்​கறிஞர் பவன் சுக்லா மறுத்​துள்​ளார். இது, முற்​றி​லும் ஜோடிக்​கப்​பட்ட வழக்​கு, அதற்​கான எந்த ஆதா​ரங்​களும் இல்லை என்று அவர் தெரி​வித்​துள்​ளார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.