ஷ்ரேயாஸ் ஐயர் செய்த செயல்! பாடம் புகட்டிய ரோஹித் சர்மா – வைரல் வீடியோ!

சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற தனியார் விருது வழங்கும் விழாவில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்டனர். விழாவில் ஸ்ரேயஸ் ஐயர் தமக்கு வழங்கப்பட்ட விருதை தன் காலுக்கு அடியில் வைத்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சக வீரர் ரோகித் சர்மாவின் மனைவி சுட்டிக்காட்டிய பிறகு, ரோகித் சர்மா அந்த விருதை எடுத்து மேஜையில் வைத்தது, அவரது செயலுக்கு பாராட்டுகளை பெற்றுத் தந்துள்ளது.

Add Zee News as a Preferred Source

ஷ்ரேயாஸ் ஐயருக்கு விருது!

பிரபலமான கிரிக்கெட் வீரர்கள் பலர் கலந்துகொண்ட இந்த விழாவில், ஸ்ரேயஸ் ஐயருக்கு விருது வழங்கப்பட்டது. மேடையில் விருதை பெற்றுக்கொண்டு தனது இடத்திற்கு திரும்பிய அவர், அந்த விருதை தரையில் தன் காலுக்கு அருகில் வைத்துவிட்டு அமர்ந்தார். இதை கவனித்த ரோகித் சர்மாவின் மனைவி ரித்திகா, உடனடியாக இது குறித்து தனது கணவர் ரோகித் சர்மாவின் கவனத்திற்கு கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. மனைவி காதில் சொன்னதைக் கேட்டவுடன் சற்றும் தாமதிக்காமல் ரோகித் சர்மா, ஸ்ரேயஸ் ஐயரின் காலுக்கு அருகில் இருந்த விருதை எடுத்து, அவருக்கு முன்னால் இருந்த மேஜையின் மீது வைத்தார். இந்த சம்பவம் குறித்த காணொளி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, வைரலாகியுள்ளது.

எழுந்த விமர்சனங்கள்!

விருதுக்கு உரிய மரியாதையை அளிக்க தவறிய ஸ்ரேயஸ் ஐயரின் செயல் குறித்து சில விமர்சனங்கள் எழுந்தாலும், ரோகித் சர்மாவின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். ஒரு மூத்த வீரராக, சக வீரரின் செயலை சரி செய்து, விருதுக்கு உரிய அங்கீகாரத்தை அளித்த அவரது பண்பு, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சிறிய நிகழ்வு, இந்திய அணி வீரர்களுக்கு இடையே உள்ள நட்பையும், ஒருவருக்கொருவர் காட்டும் மரியாதையையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

ஆஸ்திரேலியா தொடர்!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிவு பெற்றுள்ள நிலையில், இந்திய அணி வீரர்கள் ஆஸ்திரேலியாவிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர். அங்கு மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரிலும், ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாட உள்ளனர். இந்த தொடரில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி விளையாட உள்ளதால் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஆஸ்திரேலியாவில் இது அவர்களுடைய கடைசி தொடராக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் அக்டோபர் 19ஆம் தேதி நடைபெறும் முதல் ஒருநாள் போட்டியில் மழை குறுக்கிடலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த தொடரில் சும்மன் கில் கேப்டன் ஆகவும், ஸ்ரேயாஸ் ஐயர் துணை கேப்டன் ஆகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

About the Author


RK Spark

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.