தற்போதைய இந்திய அணியின் மூத்த அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. இவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக சரியாக வாய்ப்பு கிடைக்காமல் இருக்கிறது. கடந்த 2023ஆம் ஆண்டு ஒருநாள் உலக் கோப்பையில் இந்திய அணி இறுதி போட்டி வரை வருவதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தார். இதையடுத்து காயம் அடைந்த அவர் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். இதனால் அவர் 2024-2025 ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் விளையாட முடியாமல் போனது.
Add Zee News as a Preferred Source
பின்னர் குணமடைந்த முகமது ஷமி, உள்ளூர் போட்டிகளில் விளையாடி வந்தார். இதையடுத்து அவருக்கு 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடும் வாய்ப்பு கிடைத்த நிலையில், இந்திய அணி அந்த தொடரில் வெல்ல பங்காற்றினார். ஆனால் அதன் பின்னர் அவருக்கு சரியான உடற் தகுதி இல்லை என கூறி இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் போட்டிகளில் கழட்டிவிடப்பட்டார். இந்த சூழலில், தொடர்ந்து வாய்ப்புகளுக்காக காத்திருந்து ஏமாற்றம் அடைந்த ஷமி, ரஞ்சி டிராபியில் விளையாட ஃபிட்டாகைருக்கும் நான் இந்திய அணிக்காக விளையாடமாட்டேனா? என அதிருப்தி தெரிவித்தார்.
இந்த நிலையில், முகமது ஷமியை இந்திய அணி இதனால்தான் கழட்டிவிடுகிறது என அதற்கான காரணத்தை தென்னாப்பிரிக்கா முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், இந்திய அணி எடுத்திருப்பது மிகப்பெரிய முடிவு. அவர்கள் முகமது ஷமியை க்டந்து விட்டார்கள் என நினைக்கிறேன். எனக்கு அதனுடைய பின்னணி என்னவென்று தெரியாது. காரணங்கள் என்னவாக வேண்டும் இருக்கலாம்.
அவர் காயத்தை கொண்டிருப்பது ஒரு காரணமாக இருக்கலாம். அவருடைய பந்து வீச்சு வேகம் குறைந்தது ஒரு காரணமாக இருக்கலாம். சமீப காலமாக அவரது வேகம் குறைந்துள்ளது. அதற்காக அவருடைய பயணம் முடிந்துவிட்டது என்று அர்த்தம் அல்ல. அவர் கம்பேக் கொடுப்பார் என நம்பலாம். நானும் அவரது ரசிகன்தான். சிறந்த வீரரான அவர் அணியில் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது என ஏ.பி. டி வில்லியர்ஸ் கூறினார்.
About the Author
R Balaji