சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று கரூர் சம்பவம் குறித்து காரசாரமான விவாதங்கள் நடைபெற்று வந்த நிலையில், சபாநாயகரின் நடவடிக்கையை கண்டித்து, சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர் சபாநாயகர் இருக்கைக்கு எதிராக அமர்ந்து, தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. செப்டம்பர் 27ந்தேதி அன்று தவெக தலைவர் விஜயின் கரூர் பிரசார கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதங்கள் நடைபெற்றது. இந்த விபத்து குறித்து, முதலமைச்சர் ஸ்டாலினுக்கும், எதிர்க்கட்சி தலைவர் […]
