​ராஜஸ்தான் பேருந்து தீ விபத்தில் உயிரிழப்பு 21-ஆக உயர்வு: விதிகளை மீறி மாற்றங்​கள் செய்யப்பட்டது அம்பலம் 

ஜெய்​சால்​மர்: ராஜஸ்​தானில் நேற்று முன்​தினம் நடந்த பேருந்து தீ விபத்​தில் உயி​ரிழந்​தவர்​களின் எண்​ணிக்கை 21-ஆக அதி​கரித்​துள்​ளது. புத்​தம் புதிய அந்த தனி​யார் பேருந்​தில் விதி​களை மீறி மாற்​றங்​கள் செய்​யப்​பட்​டதே இந்த விபத்​துக்கு முக்​கிய காரணம் என்​பது தெரிய​வந்​துள்​ளது.

ஜெய்​சால்​மரிலிருந்து நேற்று முன்​தினம் பிற்​பகலில் 57 பயணி​களை ஏற்​றிக்​கொண்டு ஜோத்​பூருக்கு புறப்​பட்டு சென்ற தனி​யார் பேருந்து தையாத் கிராமத்​துக்கு அருகே திடீரென தீப்​பிடித்து எரிந்​தது. இதில், 21 பேர் உடல் கருகி பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். தீக்​காயமடைந்த 16 பேர் மருத்​து​வ​மனை​களில் சிகிச்சை பெற்று வரு​கின்​றனர். இதில், பலரது நிலை கவலைக்​கிட​மாக உள்​ளது.

இந்த நிலை​யில், புத்​தம் புதி​தாக வாங்​கப்​பட்ட அந்​தப் பேருந்​தில் விதி​களை மீறி இஷ்டம்​போல் மாற்​றங்​கள் செய்​யப்​பட்​டுள்​ளது. அவசர​காலத்​தில் வெளி​யேறும் வழி இல்​லாமல் இருந்​துள்​ளது. இரண்டு கதவு​கள் இல்​லாத அந்த பேருந்​தில் தீப்​பற்​றிய​வுடன் பயணி​கள் அனை​வரும் ஒரே கதவு வழி​யாக முண்​டி​யத்​துக்​கொண்டு வெளி​யேற முயன்​றுள்​ளனர். அந்த வழி​யும் மிக​வும் குறுகலாக இருந்​துள்​ளது. இதனால், கூட்ட நெரிசல் ஏற்​பட்​டுள்​ளது. சில பயணி​கள் தீயி​லிருந்து தப்​பிக்க ஜன்​னலை உடைத்து குதித்​துள்​ளனர். அக்​கப்​பக்​கத்​தினர் ஓடிவந்து மீட்​ப​தற்​குள் சில நிமிடங்​களில் பெரும்​பாலான பயணி​கள் தீயில் சிக்​கிக் கொண்​டனர். பலரது உடல்​கள் அடை​யாளம் காண முடி​யாத அளவுக்கு கரு​கி​விட்​டது. இதையடுத்​து, டிஎன்ஏ பரிசோதனை மூலம் உடல்​களை அடை​யாளம் காணும் பணி நடை​பெற்​று​வரு​கிறது.

பேருந்​தின் பின்​பக்க பகு​தி​யில் தீப்​பிடித்​தாக நேரில் பார்த்​தவர்​கள் தெரி​வித்​துள்​ளனர். மின் கசிவு காரண​மாக இந்த தீவிபத்து ஏற்​பட்​டிருக்​கலாம் என்று சந்​தேகிக்​கப்​படு​கிறது. இருப்​பினும், உண்​மை​யான காரணம் என்ன என்​பதை தடய​வியல் சோதனை மூலம் உறுதி செய்ய முடி​யும் என்று அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர்.“எனது வாழ்​நாளில் இது​போன்ற ஒரு கோர சம்​பவத்தை நான் பார்த்​த​தில்​லை. இறந்த பயணி​களை அடை​யாளம் காண டிஎன்ஏ மா​திரி​கள் சேகரிக்​கப்​படும்” என்று ராஜஸ்​தான் சுகா​தார அமைச்​சர் கஜேந்​திர சிங்​ கிம்​சார்​ தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.