கைராகர்: சத்தீஸ்கர் மாநிலம் கைராகர் மாவட்டம் சாராகோண்டி கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி தேவ்லா பாய் படேல். அவர் சாலையோரம் 20 ஆண்டுகளுக்கு முன் நட்டு வளர்த்த அரச மரத்தில் சுவாமி சிலை வைத்து அப்பகுதி மக்கள் வழிபட்டு வந்தனர்.
இந்த மரம் இருக்கும் இடம் அருகே இம்ரான் மேமன் என்பவர் நிலம் வாங்கினார். இதையடுத்து அந்த அரச மரத்தை அவர் வெட்டிவிட்டார். இதைப் பார்த்த தேவ்லா பாய் படேல் மரத்தடியில் அமர்ந்து கதறி அழுதார். இந்த வீடியோ வைரலாக பரவியது.
இந்நிலையில் அரச மரம் வெட்டப்பட்ட இடத்தில் கிராமத்தினர் சிறப்பு பரிகார பூஜை செய்து வழிபட்டனர். மூதாட்டி தேவ்லா பாய் படேலுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், கிராமத்தினர் புதிய மரக் கன்றை வழங்கி, வெட்டப்பட்ட மரம் அருகே நட வைத்தனர். அப்பகுதி எம்எல்ஏ யசோதா வர்மா, தேவ்லா பாய்க்கு ருத்ராட்சம் மரக்கன்றை வழங்கி நட வைத்தார்.