அரட்டை செயலி vs வாட்ஸ்அப் செயலி.. இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

Arattai App And WhatsApp App: இந்தியத் தொழில்நுட்ப நிறுவனமான ஸோஹோ (Zoho) உருவாக்கிய ‘அரட்டை’ (Arattai) என்ற மெசேஜிங் செயலி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் உருவாக்கப்பட்ட இந்த செயலிக்கு நாட்டு மக்கள் முக்கியத்துவம் கொடுப்பதால், இந்த செயலியின் பிரபலமடைந்து வருகிறது. அரட்டை செயலியை பதிவிறக்கம் செய்வது என்பது நாளுக்கு நாள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக சாமானியர்கள் தொடங்கி ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் வரை மென்பொருள் நிறுவனமான ஜோகோ அறிமுகப்படுத்திய அரட்டை செயலி பற்றிதான் பேசி வருகிறார்கள். எனவே அரட்டை செயலி vs வாட்ஸ்அப் செயலி இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்பதைக் குறித்து தெரிந்துக்கொள்ளுவோம்.

Add Zee News as a Preferred Source

அரட்டை செயலி எப்பொழுது தொடங்கப்பட்டது?

கடந்த 2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அரட்டை செயலியை கடந்த ஏழு நாட்களில் 7 மில்லியன் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.வாட்ஸ்அப் செயலிக்கு மாற்றாக சந்தைப்படுத்தப்படும் இந்த செயலியானது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.வாட்ஸ்அப் செயலியை சுமார் 853.8 8 மில்லியன் மக்கள் பயன்படுத்தி வரும் நிலையில், அதற்கு சரியான போட்டியாக அரட்டை அமைந்துள்ளது. அரட்டை என்பது தமிழ்ச்சொல் ஆகும். அதேபோல் ஜோஹோ கார்ப்பரேஷன் நிறுவனம் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது.

அரட்டை (Arattai) செயலியின் சிறப்பம்சங்கள்:  

– அரட்டை மற்றும் வாட்ஸ்அப் ஆகிய இரண்டும் பிரண்ட்ஸ் மற்றும் தொழில்முறை நபர்களுடன் இணைவதற்கான வாய்ப்பை வழங்கினாலும், அதன் சிறப்பம்சங்கள் மற்றும் பிரைவசி குறித்த சில விஷயங்களில் வேறுபாடுகள் உள்ளன. 

– சாட்டிங் மீடியாஃபைல்களை பகிர்தல், வாய்ஸ் நோட் அனுப்புதல், வாய்ஸ் மற்றும் வீடியோ கால் போன்ற அடிப்படை வசதிகள் உள்ளது. 

– அரட்டை செயலியை தற்போது மல்டி டிவைஸ் எனப்படும் ஒரே நேரத்தில் பல தளங்களில் அணுகும் முறை உள்ளது. 

– ஒரே சமயத்தில் ஐந்து தளங்களில் பயன்படுத்த முடியும். 

– அரட்டை செயலியில் பாக்கெட் என்ற பிரத்தியேக செல்ப் சாட் வசதி உள்ளது. இதில் பயணர்கள் தங்கள் புகைப்படங்கள், வீடியோக்கள், குறிப்புகள், ரிமைண்டர்ஸ் மற்றும் பிற பைல்களை தனிப்பட்ட பயன்பாட்டுக்காக சேமித்து வைக்கலாம். 

– வீடியோ மீட்டிங் நினைவூட்டும் வசதி உள்ளது. அரட்டை செயலியை நாம் குறைந்த ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன்கள், பழைய 2ஜி மற்றும் 3ஜி நெட்வொர்க்களிகளிலும் கூட செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

– அரட்டை தற்போது வாய்ஸ் மற்றும் வீடியோ கால்களுக்கு மட்டுமே முழு எண் டு எண்ட் என்கிரிப்ஷன் வசதியை வழங்குகிறது. அதேநேரம் அனைத்து வகையான தகவல் தொடர்புகளுக்கும் இது பயன்படுத்தப்படுகிறது.

சுருக்கம்:

தனியுரிமை (விளம்பரங்கள் இல்லை, தரவு பணமாக்குதல் இல்லை), அணுகல் (மெதுவான நெட்வொர்க்குகள் மற்றும் பழைய தொலைபேசிகளில் நன்றாக வேலை செய்கிறது) மற்றும் உள்நாட்டு, இந்திய மையப்படுத்தப்பட்ட தளத்தை முன்னுரிமைப்படுத்தும் பயனர்களுக்கு அரட்டை சிறந்த தீர்வாக இருக்கும்.

About the Author


Shiva Murugesan

Shiva Murugesan

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.