இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளை முடித்த கையோடு ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு அந்நாட்டு அணியுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை விளையாட இருக்கிறது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் இந்த சுற்றுப்பயணத்தில் மூத்த வீரரகளான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா கலந்து கொள்வதால், இத்தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
Add Zee News as a Preferred Source
அதிக ரன் அடிக்கப்போகும் வீரர்?
முதலில், ஒருநாள் தொடர் நடைபெற இருக்கிறது. இத்தொடர் வரும் 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு தொடங்கும். இந்த நிலையில், இத்தொடரை கைப்பற்றப்போகும் அணி எது? எந்த வீரர் அதிக ரன்கள் குவிப்பார் என்பதை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் கிளார்க் கணித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், இந்த தொடரில் அதிக ரன்கள் அடிப்பவராக விராட் கோலி இருப்பார் என நான் நினைக்கிறேன். இல்லையென்றால் ரோகித் சர்மாவாக இருப்பார். ஏனென்றால் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம்தான் அவர்களுக்கு கடைசியாக இருக்கும். எனவே கண்டிப்பாக ஏதையாவது சாதித்துவிட்டுதான் தொடரை விட்டு செல்ல வேண்டும் என அவர்கள் நினைப்பார்கள்.
அதேசமயம் ஆஸ்திரேலியா மண்ணில் தொடக்க வீரராக களம் இறங்குவதை விட நடு வரிசையில் பேட்டிங் செய்வதுதான் எளிது. இதனால் விராட் கோலி அதிக ரன்கள் அடித்தார் என கூறுகிறேன்.
தொடரை எந்த அணி வெல்லும்?
இந்த தொடரை வெல்லப்போவது யார் என்று கேட்டால் அது ஆஸ்திரேலியா என்றுதான் கூறுவேன். இந்த தொடரில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இருக்காது, மிகவும் விறுவிறுப்பாக சொல்லும். நான் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவன் என்பதால் என்னுடைய நாட்டிற்கு ஆதரவாகதான் கணிப்பை வெளியிடுவேன். மேலும், ஆஸ்திரேலியா வெல்லும் என என்னுடைய உள்ளுணர்வு சொக்கிறது என மைக்கேல் கிளார்க் தெந்ரிவித்துள்ளார்.
கடைசியாக 2020-21ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு இந்திய அணி சுற்றுப்பணம் மேற்கொண்டது. அப்போது அத்தொடரை இந்திய அணி 1-2 என்ற கணக்கில் இழந்தது குறிப்பிடத்தக்கது.
About the Author
R Balaji