டொயோட்டாவின் பிரசத்தி பெற்ற C-பிரிவு எஸ்யூவி அர்பன் க்ரூஸர் ஹைரைடரில் கூடுதலாக ஏரோ எடிசன் என்ற பெயரில் டீலர்கள் மூலம் வழங்கப்பட உள்ள சிறப்பு ஆக்செரீஸ் பேக் ரூ.31,999 விலையில் வெளியாகியுள்ளது.
Aero Edition ஸ்டைலிங் தொகுப்பில் அடங்கும் உபகரணங்கள் மற்றும் அம்சங்கள்:
- முன்பக்க ஸ்ப்ளிட்டர் (Front Spoiler)
- பின்புற ஸ்பாய்லர் (Rear Spoiler)
- பக்க ஸ்கிரட்ஸ் (Side Skirts)
- வெள்ளை, சில்வர், பிளாக் மற்றும் சிவப்பு ஆகிய 4 நிறங்கள் தேர்வு செய்யலாம்.
- இந்த ஸ்டைலிங் தொகுப்பின் செலவு ₹ 31,999 ஆகும்
இந்த காரில் 103hp மற்றும் 136Nm டார்க் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பெற்று மைல்டு ஹைபிரிட் மற்றும் சிஎன்ஜி ஆப்ஷனும், கூடுதலாக 116hp பவர் வர் 1.5 லிட்டர் வலுவான ஹைபிரிட் ஆப்ஷன் பெற்றுள்ளது. அர்பன் க்ரூஸர் ஹைரைடர் ரூ. 10.99 லட்சத்தில் தொடங்கி ரூ. 19.76 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை கிடைக்கின்றது.