டிவிஎஸ் அப்பாச்சி RTX ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள் | TVS Apache RTX 300 on-road price and specs

டிவிஎஸ் நிறுவனத்தின் முதல் அட்வென்ச்சர் டூரிங் அப்பாச்சி RTX பைக்கில் இடம்பெற்றுள்ள  எஞ்சின், மைலேஜ், வசதிகள், விலைப்பட்டியல் மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களை அறிந்து கொள்ளலாம்.

TVS Apache RTX

மிக நீண்ட ஹைவே டூரிங் பயணத்துக்கு ஏற்ற வடிவமைப்பினை பெற்று லேசான ஆஃப் ரோடு அனுபவங்களுக்கு ஏற்றதாக அமைந்துள்ள அப்பாச்சி ஆர்டிஎக்ஸ் (RTX என்றால் Rally Tour eXtreme ஆகும்.) பைக்கில் மிக நீண்ட தொலைவு பயணத்திலும் என்ஜின் சிறப்பான முறையில் குளிர்விக்கும் வகையிலான நுட்பத்தை பெற்ற என்ஜின், க்ரூஸ் கண்ட்ரோல் உட்பட ரைடிங் மோடுகள் என பலவற்றை பெற்றுள்ள நிலையில், போட்டியாளர்களை விட குறைந்த விலை பிளஸ் ஆக அமைந்தாலும் சுசூகி வி-ஸ்ட்ரோம் SX,  கேடிஎம் 250 அட்வென்ச்சர் போன்றவை சவால் விடுக்கும் வகையில் அமைந்துள்ளது.

9000rpm-ல் 36ps பவர் மற்றும் 7000rpm-ல் 28.5NM டார்க் வெளிப்படுத்துகின்ற 299.1cc ஒற்றை சிலிண்டர் லிக்யூடு  என்ஜின் கொடுக்கப்பட்டு 6 வேக கியர்பாக்ஸ் கொண்டு லிட்டருக்கு 28-32 கிமீ மைலேஜ் தரக்கூடும் வகையில் அமைந்துள்ளது.

  • Base Apache RTX 300 – ₹ 1,99,000
  • TOP Apache RTX 300 – ₹ 2,14,000
  • BTO Apache RTX 300 – ₹ 2,34,000

(எக்ஸ்-ஷோரூம் தமிழ்நாடு)

2026 TVS Apache RTX on-Road Price Tamil Nadu

டிவிஎஸ் மோட்டாரின் டூரிங் அட்வென்ச்சர் அப்பாச்சி RTX ஆன்-ரோடு விலை தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், வேலூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, ஓசூர் மற்ற மாவட்டங்களுக்கும் புதுச்சேரி மாநிலத்துக்கும் பொருந்தும். ஆன்-ரோடு விலை டீலர்களை பொறுத்து மாறுபடும்.

  • Base Apache RTX 300 – ₹ 2,37,776
  • TOP Apache RTX 300 – ₹ 2,54,175
  • BTO Apache RTX 300 – ₹ 2,78,654

(All Price On-road Tamil Nadu)

  • Base Apache RTX 300 – ₹ 2,14,130
  • TOP Apache RTX 300 – ₹ 2,25,542
  • BTO Apache RTX 300 – ₹ 2,47,431

(All Price on-road Pondicherry)

tvs apache rtx clustertvs apache rtx cluster

க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் மல்டி லெவல் ரைடிங் மோடுகளை அனைத்து வேரியண்டிலும் கொடுத்துள்ள டிவிஎஸ் நிறுவனம் ரைடிங் மோடுகளில் உள்ள Urban, Rain, Tour மற்றும் Rally என நான்கு விதமான மோடுகளுக்கு ஏற்ப என்ஜின் செயல்திறன், டிராக்‌ஷன் கண்ட்ரோல் மற்றும் சுவிட்சபிள் ஏபிஎஸ் செயல்படும்.

இரண்டாவது மாடலாக உள்ள டாப் வேரியண்டில் கூடுதல் அம்சங்களாக ஹெட்லேம்ப் டிஆர்எல், ஹெட்லேம்ப் அனிமேஷன் வெல்கம், மேப் மிரரிங், டிஎஃப்டி கனெக்ட்டிவிட்டி, பை டைரக்‌ஷனல் க்விக் ஷிஃப்டர், டாப் கேஸ் மவுண்டிங் பெற்று உள்ள நிலையில் BTO வகையில் பிராஸ் கோடிங் செயின், TPMS, அட்ஜெஸ்டபிள் சஸ்பென்ஷன் உள்ளது.

ஸ்டீல் டெர்லீஸ் சேஸிஸை பெற்றுள்ள இந்த அப்பாச்சி RTX பைக்கில் இருபக்கத்திலும் 180 மிமீ பயணிக்கின்ற அப்சைடு டவுன் ஃபோர்க் மற்றும் மோனோஷாக் அப்சார்பர் உள்ளது.  முன்பக்கம் 320 மிமீ டிஸ்க் பிரேக்குடன் முன்புறத்தில் 19 அங்குல வீல் மற்றும் 17 அங்குல வீல் பெற்று 240 மிமீ டிஸ்க்குடன் டீயூப்லெஸ் டயர் கொடுக்கப்பட்டுள்ளதால் ஆஃப் ரோடு பயணங்களில் மிகப்பெரிய அளவில் சிரமத்தை தவிர்க்கலாம்.

ஆர்டிஎக்ஸ் பைக்கில் 12.5 லிட்டர் பெட்ரோல் டேங்க் உடன் பரிமாணங்கள் 2,176 மிமீ நீளம், 885 மிமீ அகலம் மற்றும் 1,400 mm உயரம் பெற்று, 1,430 மிமீ வீல்பேஸ் கொண்டதாக உள்ளது. 200 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸூடன் மற்றும் 180 கிலோ எடை கொண்டு டீயூப்லெஸ் டயர் கொண்டுள்ள ஸ்கூட்டரில் முன்புறத்தில் 110×80 -19 மற்றும் 150×70 -17 உள்ளது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஎக்ஸ் 300 நுட்பவிவரங்கள்

என்ஜின்
வகை லிக்யூடு கூல்டு, 4 stroke
Bore & Stroke 78 mm x 62.6 mm
Displacement (cc) 299.1cc
Compression ratio
அதிகபட்ச பவர் 36 PS @ 9,000 rpm
அதிகபட்ச டார்க் 28.5 Nm @ 7,000 rpm
எரிபொருள் அமைப்பு Fuel injection (FI)
டிரான்ஸ்மிஷன் & சேஸ்
ஃபிரேம் ஸ்டீல் டெர்லிஸ் ஃபிரேம்
டிரான்ஸ்மிஷன் 6 ஸ்பீடு
கிளட்ச் வெட் டைப்
சஸ்பென்ஷன்
முன்பக்கம் அப்சைடு டவுன் ஃபோர்க்
பின்பக்கம் மோனோ ஷாக் அப்சார்பர்
பிரேக்
முன்புறம் 320 mm டிஸ்க்
பின்புறம் டிஸ்க் 240 mm (with ABS)
வீல் & டயர்
சக்கர வகை அலாய்
முன்புற டயர் 110/80 – 19 ட்யூப்லெஸ்
பின்புற டயர் 150/70 – 17 ட்யூப்லெஸ்
எலக்ட்ரிக்கல்
பேட்டரி 12V-8Ah VRLA பேட்டரி
ஸ்டார்டர் வகை எலக்ட்ரிக் செல்ஃப்
பரிமாணங்கள்
நீளம் 2176 mm
அகலம் 885 mm
உயரம் 1400 mm
வீல்பேஸ் 1430 mm
இருக்கை உயரம் 835 mm
கிரவுண்ட் கிளியரண்ஸ் 200 mm
எரிபொருள் கொள்ளளவு 12.5 litres
எடை (Kerb) 180kg

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஎக்ஸ்  நிறங்கள்

பேஸ் வேரியண்டில் லைட்டினிங் பிளாக், வெள்ளை என இரண்டும், டாப் வேரியண்டில் லைட்டினிங் பிளாக், மெட்டாலிக் ப்ளூ, டார்ன் பிரான்ஸ், மற்றும் BTO வேரியண்டில் வைப்பர் க்ரீன், லைட்டினிங் பிளாக், மெட்டாலிக் ப்ளூ, டார்ன் பிரான்ஸ் போன்ற நிறங்கள் உள்ளது.

tvs apache rtx 300 greentvs apache rtx 300 green

2026 TVS Apache RTX Rivals

அப்பாச்சி ஆர்டிஎக்ஸ் மாடலுக்கு நேரடியான போட்டியை சுசூகி வி-ஸ்ட்ரோம் எஸ்எக்ஸ், கேடிஎம் 250 அட்வென்ச்சர், போன்ற மூன்று மாடல்களும் நீண்ட தொலைவு டூரிங் அனுபவத்துக்கு ஏற்றதாகவும் யெஸ்டி அட்வென்ச்சர் இதே விலையில் கிடைக்கின்ற ஆஃப் ரோடு சார்ந்த மாடலாகும்.

Faqs about TVS Apache RTX

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஎக்ஸ் 300 என்ஜின் விபரம் ?

9000rpm-ல் 36ps பவர் மற்றும் 7000rpm-ல் 28.5NM டார்க் வெளிப்படுத்துகின்ற 299.1cc ஒற்றை சிலிண்டர் லிக்யூடு என்ஜின் கொடுக்கப்பட்டு 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் உள்ளது.

அப்பாச்சி ஆர்டிஎக்ஸ் 300 மைலேஜ் எவ்வளவு ?

அப்பாச்சி ஆர்டிஎக்ஸ் 300 லிட்டருக்கு 28-32 கிமீ வழங்கலாம்.

அப்பாச்சி ஆர்டிஎக்ஸ் 300 ஆன்ரோடு விலை எவ்வளவு ?

அப்பாச்சி ஆர்டிஎக்ஸ் 300 பைக்கில் ஆன்ரோடு விலை ரூ.2.38 லட்சம் முதல் ரூ. 2.79 லட்சம் வரை உள்ளது.

அப்பாச்சி ஆர்டிஎக்ஸ் 300 முழுமையான ஆஃப் ரோடு பயணங்களுக்கு ஏற்றதா ?

முழுமையான ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்றதல்ல, ஆனால் நீண்ட தொலைவு அட்வென்ச்சர் டூரிங் மற்றும் குறைந்த ஆஃப் ரோடு சாலைகளுக்கு ஏற்றதாக உள்ளது.

Related Motor News

TVS Apache RTX image gallery

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.