பாகிஸ்தான் பீரங்கிகளை சிறைபிடித்து ஊர்வலமாக சென்ற ஆப்கன் வீரர்கள்: தலிபான் செய்தித்தொடர்பாளர் தகவல்

காபூல்: பாகிஸ்​தானுக்கு சொந்​த​மான ராணுவ டாங்​கி​களை ஆப்​கானிஸ்​தான் ராணுவம் சிறைபிடித்​த​தாக தலி​பான் செய்​தித்​தொடர்​பாளர் ஜபிஹுல்லா முஜாகித் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் எக்ஸ் சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில், “எல்​லைப் பகு​தி​களில் பாகிஸ்​தான் நடத்​திய துப்​பாக்​கிச் சூட்​டுக்கு ஆப்​கானிய படைகள் தகுந்த பதிலடி கொடுத்​தன. இதில், ஏராள​மான பாகிஸ்​தான் வீரர்​கள் கொல்​லப்​பட்​டனர்.

பாகிஸ்​தானுக்கு சொந்​த​மான ராணுவ டாங்​கி​கள் மற்​றும் ஆயுதங்​கள் கைப்​பற்​றப்​பட்​டன. பாகிஸ்​தானின் ராணுவ கட்​டமைப்​பு​களை ஆப்​கன் படைகள் அழித்​து​விட்​டன” என்று தெரி​வித்​துள்​ளார்.

பாகிஸ்​தான் மற்​றும் ஆப்​கானிஸ்​தான் இடையே 48 மணி நேர போர் நிறுத்​தத்​துக்கு ஒப்​புக் கொள்​வதற்கு முன்பு ஆப்​கானிஸ்​தானின் தென்​கிழக்​கில் உள்ள ஸ்பின் போல்​டாக் மாகாணத்​தின் தெருக்​களில் பாகிஸ்​தானிட​மிருந்து சிறைபிடிக்​கப்​பட்ட ராணுவ டாங்​கி​கள் அணிவகுத்து செல்​வ​தாக கூறப்​படும் வீடியோ சமூக வலை​தளங்​களில் வெளி​யாகி வைரலாகின.

பாகிஸ்தான் மறுப்பு: ஆனால், இதனை பாகிஸ்​தான் மறுத்​துள்​ளது. வீடியோக்​களில் காணப்​படும் டாங்​கி​கள் தங்​கள் ராணுவத்​துக்கு சொந்​த​மானது இல்லை என்று கூறி​யுள்​ளது.

இதுகுறித்து ஜியோ நியூஸுக்கு அளித்த பேட்​டி​யின்​ போது பாகிஸ்​தானின் பாது​காப்பு அமைச்​சர் கவாஜா ஆசிப் கூறுகை​யில், “அவர்​கள் (ஆப்​கானிஸ்​தான்) பாகிஸ்​தான் ராணுவ டாங்​கி​களை கைப்​பற்​றிய​தாக வீடியோக்​களை காட்​டு​கின்​றனர். ஆனால், அது எங்​களுக்கு சொந்​த​மானது இல்​லை. அதனை அவர்​கள் ஏதாவது பழைய இரும்​புக்​கடையி​லிருந்து வாங்​கி​யிருக்​கலாம்” என்​றார்.

இந்த செய்​தி​யின் உண்​மைத்​தன்​மையை உறு​திப்​படுத்த முடி​யாத நிலை​யில், ஏஐ உதவி​யுடன் தேடும்​போது, அது ஒரு சோ​வி​யத் கால T-55 டாங்கி என்​பது தெரிய​வந்​தது. இது, 1980-களில் இருந்து ஆப்​கானிஸ்​தான் வசம் உள்​ள​தாக தெரிய​வந்​துள்​ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.