புதுடெல்லி: பிஹார் தேர்தலில் போட்டியிடும் 12 வேட்பாளர்கள் அடங்கிய இரண்டாவது பட்டியலை பாஜக நேற்று வெளியிட்டது. இதில், நாட்டுப்புற பாடகி மைதிலி தாக்குருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர், தர்பங்கா மாவட்டத்தில் உள்ள அலிகர் தொகுதியிலிருந்து போட்டியிட்டு தனது அரசியல் வாழ்க்கையை முதன்முறையாக தொடங்கவுள்ளார். இவரை தொடர்ந்து, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆனந்த் மிஸ்ராவுக்கும் பாஜக வாய்ப்பு வழங்கியுள்ளது. இவர், பக்ஸர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இவர்களைத் தவிர இந்த பட்டியலில் ரஞ்சன் குமார் (முசாபர்பூர்), ராம் சந்திரா (ஹயாகட்), சுபாஷ் சிங் (கோபால்கஞ்ச்), சோட்டி குமாரி (பனியாபூர்) ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். சாப்ரா, சோனிபூர், ரோசிரா (எஸ்சி), பர்க், ஷாபூர் மற்றும் அகியான் தொகுதிகளுக்கும் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.