ஐபிஎல் தொடரில் தொடக்கத்தில் இருந்து தற்போது வரை ஒரே அணியில் இருக்கும் வீரர் என்றால் அது விராட் கோலிதான். கடந்த சீசனில், தனது நீண்ட கால கோப்பை கனவை நினைவாக்கினார். 17 ஆண்டுகள் கழித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது. இந்த நிலையில், ஆர்சிபி அணி கைமாறப்போவதாக கூறப்பட்டு வருகிறது.
Add Zee News as a Preferred Source
அப்படி ஒருவேளை உரிமையாளர் மாறினால் விராட் கோலி விராட் கோலி ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவார் என்றும் கூறப்படுகிறது. இந்த தகவல் உண்மை என்று நம்பும் வகையில், ஆர்சிபி நிர்வாகம் வழங்கிய புதிய வர்த்தக ஒப்பந்தத்தில் விராட் கோலி கையெழுத்திட மறுத்துவிட்டதாக செய்திகள் வந்துக்கொண்டிருக்கின்றன. இதனால் ஆர்சிபி ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். இந்த நிலையில், இவை அனைத்தும் ஊகங்கள் என்றும் விராட் கோலி ஓய்வு பெற வாய்ப்பில்லை என்று முன்னாள் வீரர் கிருஷ்ணமாசாரி ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது யூடியூப் சேனலில் பேசிய அவர், இப்போதைக்கு கோலியின் ஓய்வு பெற மாட்டார். அந்த பேச்சுக்கே இடமில்லை. இவை அனைத்தும் வெறும் ஊகங்கள் மட்டுமே. கோலி இப்போதுதான் ஆர்சிபி அணிக்கு கோப்பையை வென்று கொடுத்துள்ளார். அதனால் அவர் தற்போது ஓய்வு பெறுவார் என நினைக்கவில்லை. இவை வெறும் வணிக ரீதியான முடிவுகள். விராட் கோலி நிச்சயமாக ஆர்சிபி அணியிலேயே தொடர்ந்து விளையாடுவார்.
விராட் கோலி ஏன் ஓய்வு பெற வேண்டும். 2025 ஐபிஎல் தொடரில் கூட அவர் சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தினார். ஒருவேளை அவர் ஓய்வு பெறும் முடிவை எடுத்தால் அது தனிப்பட்ட முடிவாக இருக்குமே தவிர வேறு ஏதும் இல்லை.. அவர் இன்னும் 3 ஆண்டுகளாவது ஐபிஎல் தொடரில் விளையாடுவார். அவர் எப்போதுமே ரன் குவிக்கக்கூடியவர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
விராட் கோலி இதுவரை 267 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி உள்ளார். இதில் அவர் 63 அரை சதங்கள், 8 சதம் உட்பட 8661 ரன்களை குவித்துள்ளார். அவரது சராசரி 39.55ஆகவும், அதிகபட்சமாக 113 ரன்களையும் அவர் விளாசி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
About the Author
R Balaji