அடுத்த 40 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய பிரதமரே, உலக தலைவராக செயல்படுவார்: ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் டோனி அபோட் கருத்து

புதுடெல்லி: அடுத்த 40 ஆண்​டு​களுக்​குப் பிறகு இந்​திய பிரதமரே உலகத்​தின் தலை​வ​ராக செயல்​படு​வார் என்று ஆஸ்​திரேலிய முன்​னாள் பிரதமர் டோனி அபோட் தெரி​வித்​துள்​ளார்.

டெல்​லி​யில் நேற்று நடை​பெற்ற தொலைக்​காட்சி நிகழ்ச்​சி​யில் அவர் கூறிய​தாவது: கடந்த 2022-ம் ஆண்டு இந்​தி​யா, ஆஸ்​திரேலியா இடையே தடையற்ற வர்த்தக ஒப்​பந்​தம் கையெழுத்​தானது. அண்​மை​யில் இந்​தி​யா, பிரிட்​டன் இடையே இதே ஒப்​பந்​தம் கையெழுத்​தாகி உள்​ளது. பல்​வேறு உலக நாடு​கள் சீனா​விடம் இருந்து விலகி இந்​தி​யா​வுடன் கைகோத்து வரு​கின்​றன.

உலகத்தை ஆட்​டிப் படைக்க சீனா விரும்​பு​கிறது. உலக அரங்​கில் சர்​வா​தி​காரத்தை நிலை​நாட்ட அந்த நாடு தீவிர முயற்சி செய்​கிறது. இது சீனா​வின் அண்டை நாடு​களுக்கு மட்​டுமல்ல, ஒட்​டுமொத்த உலகத்​துக்​கும் பாதிப்​பு​களை ஏற்​படுத்​தும்.

21-ம் நூற்​றாண்​டு, இந்​தி​யா​வின் நூற்​றாண்டு ஆகும். சீனாவை​விட இந்​தி​யா​வுக்கு சாதக​மான பல்​வேறு அம்​சங்​கள் உள்​ளன. உலகில் அதிக மக்​கள் தொகை கொண்ட நாடாக இந்​தியா விளங்​கு​கிறது. மேலும் இந்​தி​யா​வின் உள்​கட்​டமைப்பு வசதி​கள் தொடர்ந்து மேம்​படுத்​தப்​பட்டு வரு​கிறது. குறிப்​பாக பல்​வேறு நகரங்​களில் புதிய விமான நிலை​யங்​கள் கட்​டப்​பட்டு வரு​கின்​றன.

இந்​தி​யா​வில் ஜனநாயகம் தழைத்​தோங்கி வரு​கிறது. அதோடு இந்​தி​யர்​களின் ஆங்​கில மொழி அறிவு மிகப்​பெரிய ஊக்க சக்​தி​யாக இருக்​கிறது. பொருளா​தா​ரரீ​தி​யாக​வும் ராணுவரீ​தி​யாக​வும் சீனாவை எதிர்​கொள்​ளும் திறன் இந்​தி​யா​வுக்கு மட்​டுமே இருக்​கிறது. உலகின் ஜனநாயக வல்​லர​சாக இந்​தியா உரு​வெடுக்​கும். அடுத்த 40 முதல் 50 ஆண்​டு​களுக்​குப் பிறகு இந்​திய பிரதமரே உலகத்​தின் தலை​வ​ராக செயல்​படு​வார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை நான் ஆதரிக்​கிறேன். ஆனால் இந்​தி​யா​வின் மீது அவர் கூடு​தல் வரி​களை விதித்​ததை என்​னால் ஏற்​றுக் கொள்ள முடி​யாது. இந்த விவ​காரத்​தில் அவர் தவறு இழைத்​திருப்​ப​தாக கருதுகிறேன்.

ரஷ்​யா​விடம் இருந்து சீனாவே அதிக அளவில் கச்சா எண்​ணெயை இறக்​குமதி செய்​கிறது. அந்த நாட்​டின் மீது கூடு​தல் வரி விதிக்​காமல் இந்​தி​யா​வின் மீது வரி விதித்​ததை ஏற்​றுக் கொள்ள முடி​யாது. இவ்​​வாறு டோனி அ​போட்​ பேசி​னார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.