திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் மலையங்கிலு பகுதியை சேர்ந்த இளைஞர் அமல் பாபு (வயது 25). இவர் கடந்த 12ம் தேதி வேலை முடிந்து பைக்கில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, அவரது பைக் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அமல் பாபு படுகாயமடைந்தனர். இதையடுத்து அமல் பாபுவை மீட்ட அக்கம்பக்கத்தினர் அவரை கொச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அமல் பாபு மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து, அமல் பாபுவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் சம்மதித்தனர்.
இந்நிலையில், மூளைச்சாவு அடைந்த அமல் பாபுவின் உடல் உறுப்புகள் இதயம், நுரையீரல், கல்லீரல், கண்கள் போன்றவை தானமாக வழங்கப்பட்டன. அவரது உடல் உறுப்புகள் 4 பேருக்கு தானமாக வழங்கப்படுள்ளன. அமல் பாபுவின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க சம்மதம் தெரிவித்த அவரின் குடும்பத்தினருக்கு பலரும் வாழ்த்து, பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் அமல் பாபுவின் குடும்பத்தினரை கேரள கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், துக்கத்தை நம்பிக்கையாக மாற்றியமைத்த கருணை மற்றும் தைரியத்திற்காக அமல் பாபுவின் குடும்பத்தினரை மனமார பாராட்டுகிறேன்’ என்றார்,