கோவாவில் கடற்படை வீரர்களுடன் தீபாவளியை கொண்டாட பிரதமர் மோடி திட்டம்

புதுடெல்லி: கடந்த 2014-ம் ஆண்டு நாட்​டின் பிரதம​ராக பொறுப்​பேற்​ற​திலிருந்து பிரதமர் மோடி ராணுவத்​தினருடன் தீபாவளி கொண்​டாடு​வதை வழக்​க​மாக கடைபிடித்து வரு​கிறார்.

அந்த வகை​யில், பஹல்​காம் தீவிர​வாத தாக்​குதலுக்கு எதி​ராக நமது ராணுவம் மேற்​கொண்ட ஆபரேஷன் சிந்​தூரின் சிறப்​பான வெற்​றியைக் கொண்​டாட பிரதமர் மோடி முடிவு செய்​துள்​ளார். அதனால், இந்த ஆண்டு தீபாவளியை கோவா கடற்​கரை​யில் கடற்​படை வீரர்​களு​டன் இணைந்து கொண்​டாட பிரதமர் முடிவு செய்​துள்​ள​தாகக் கூறப்​படு​கிறது.

கடந்த 2014-ல் லடாக்​கில் உள்ள சியாச்​சின் பனிப்​பிரதேசத்​துக்கு சென்ற அவர், அங்கு பாது​காப்புப் படை​யினருடன் இணைந்து தீபாவளி கொண்​டாடி​னார். 2015-ல், 1965-ம் ஆண்டில் நடை​பெற்ற இந்​தி​யா-​பாகிஸ்​தான் போரில் நமது வீரர்​களின் தியாகத்தை போற்​றும் வகை​யில் பஞ்​சாப் அமிர்​தசரஸில் உள்ள டோக்​ராய் போர் நினை​வுச் சின்​னத்​தில் நடை​பெற்ற தீபாவளி கொண்​டாடத்​தில் பிரதமர் பங்​கேற்​றார். 2024-ல் குஜ​ராத்​தின் சர் க்ரீக்​கில் ராணுவத்​தினருடன் தீபாவளியை கொண்டாடினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.