தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தாம்பரம் – செங்கோட்டை இடையே இன்று சிறப்பு ரயில் இயக்கம்

சென்னை: தீ​பாவளி பண்​டிகையை முன்​னிட்டு பயணி​களின் வசதிக்​காக, தாம்​பரம் – செங்​கோட்டை இடையே சிறப்பு ரயிலும், சென்னை – தாம்​பரம் இடையே முன்​ப​தி​ வில்​லாத மெமு விரைவு ரயிலில் இயக்​கப்​படு​கிறது. இதன்​படி, தாம்​பரத்​தில் இருந்து இன்று (17-ம் தேதி) இரவு 7.30 மணிக்கு சிறப்பு ரயில் (06013) புறப்​பட்​டு, நாளை காலை 7.30 மணிக்கு செங்​கோட்டை சென்​றடை​யும். மறு​மார்க்​க​மாக, செங்​கோட்​டை​யில் இருந்து வரும் 20-ம் தேதி இரவு 8.45 மணிக்கு சிறப்பு ரயில் (06014) புறப்​பட்​டு, மறு​நாள் காலை 9.45 மணிக்கு தாம்​பரத்தை வந்​தடை​யும்.

இந்த ரயி​லில் ஒரு ஏசி சேர்​ கார் பெட்​டி​யும், 11 சேர் கார் பெட்​டிகளும், 4 பொது பெட்​டிகளும் இடம் பெற்​றுள்​ளன. இந்த ரயிலுக்​கான டிக்​கெட் முன்​ப​திவு தொடங்கி விட்​டது.

முன்​ப​தி​வில்​லாத சிறப்பு ரயில்: சென்னை எழும்​பூர் – மதுரைக்கு இன்​றும் (17-ம் தேதி), நாளை​யும் (18-ம் தேதி) முன்​ப​தி​வில்​லாத மெமு சிறப்பு ரயில் இயக்​கப்​படு​கிறது. இன்று இயக்​கப்​படும் இந்த சிறப்பு ரயில் எழும்​பூரில் இருந்து இரவு 11.45 மணிக்கு புறப்​பட்​டு, மறு​நாள் காலை 10.15 மணிக்​கும், நாளை இயக்​கப்​படும் சிறப்பு ரயில் இரவு 11.45 மணிக்கு புறப்​பட்​டு, மறு​நாள் முற்​பகல் 11.30 மணிக்​கும் மதுரையை சென்​றடை​யும்.

மறு​மார்க்​கத்​தில், மதுரை​யில் இருந்து அக்​.18-ம் தேதி நண்​பகல் 12 மணிக்கு முன்​ப​தி​வில்​லாத சிறப்பு ரயில் புறப்​பட்​டு, அன்று இரவு 7.15 மணிக்கு தாம்​பரத்தை அடை​யும். இது​போல, மற்​றொரு முன்​ப​தி​வில்​லாத ரயில் மதுரை​யில் இருந்து அக்​.21-ம் தேதி இரவு 8.30 மணிக்கு புறப்​பட்​டு, மறு​நாள் அதி​காலை 4.30 மணிக்கு தாம்​பரத்துக்கு வந்து சேரும். இத்​தகவல் தெற்கு ரயில்வே வெளி​யிட்ட செய்திக் குறிப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.