"வட சென்னையில் இருந்து ஒரு ஈஸ்டர் முட்டை" – Ed Sheeran உடன் பாடியது பற்றி சந்தோஷ் நாரயணன்!

பிரபல ஆங்கில பாடகர் ED Sheeran உடன் மலையாள ராப் பாடகர் ஹனுமன் கைண்ட், தீ மற்றும் சந்தோஷ் நாராயணன் கைகோர்த்து உருவாக்கியிருக்கும் பாடல் Don’t Look Down.

ED Sheeran

இதுகுறித்து ட்விட்டரில் பகிர்ந்துள்ள சந்தோஷ் நாராயணன், “என்னுடைய சிறந்த இசைக் குழுவுக்கு இது ஒரு சிறப்புமிக்க தருணம், எங்கள் சின்ன தேவதை தீ, என் பேபி (பாடலாசிரியர்) விவேக், பவர்ஃபுல்லான ஹனுமன்கைண்ட். இந்த பாடலை எட் ஷெரின் உடன் இணைந்து தயாரித்ததையும் பாடியதையும் விரும்பினேன்.

இது பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள். வட சென்னையிலிருந்து ஒரு சின்ன ஈஸ்டர் முட்டை (மறைத்துவைக்கப்பட்ட பொருள்) இதில் இருக்கிறது. அதைக் கண்டுபிடித்தால் எனக்குத் தெரிவியுங்கள். அது எந்த பாடலை நினைவுகூறுகிறது எனக் கூறுங்கள்.” என எழுதியுள்ளார்.

Don’t Look Down பாடல் எட் ஷெரினின் சமீபத்திய ஆல்பமான ப்லே (PLAY)-வில் இடம்பெற்றுள்ளது. இந்த ஆல்பம் முழுமையான எட் ஷெரின் பாடல்களாக வெளியானதுடன், இந்திய பாடர்களுடன் இணைந்து உருவாக்கப்பட்ட 4 பாடல்கள் ரீமிக்ஸ் வெர்ஷனாக வெளியிடப்பட்டிருக்கிறது.

Don’t Look Down பாடலில் சந்தோஷ் நாராயணன், தீ, ஹனுமன்கைண்ட் உடன் இணைந்து போல வெவ்வேறு பாடல்களில் ஜொனிட்டா காந்தி, அர்ஜித் சிங், கரன்அஜ்லா ஆகியோருடன் இணைந்து பணியாற்றியுள்ளார் எட் ஷெரின்.

இந்த பாடல் பிடித்திருந்தால் உங்கள் அனுபவத்தை கமண்டில் பகிருங்கள்!



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.