உத்தர பிரதேச மாநிலத்தில் ஓநாய்களை வேட்டையாடும் பணி தீவிரம்: முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவால் கிராம மக்கள் நிம்மதி

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் பஹரைச் மாவட்ட கேசர்​கஞ்​சின் கிராமங்​களில் கடந்த செப்​டம்​பர் 9 முதல் ஓநாய்​கள் நடமாட்​டம் அதி​கரித்​துள்​ளது. இமயமலை அடி​வாரத்​தில் நதிக்​கரைகளில் பொது​மக்​கள் வாழும் பகு​தி​யில் ஓநாய்​கள் தாக்​கிய​தில் 4 குழந்​தைகள், ஒரு பெண் உள்​ளிட்ட 6 பேர் உயி​ரிழந்​தனர். 11 குழந்​தைகள் உட்பட 29 பேர் காயமடைந்​தனர்.

தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்த முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத், செப்​டம்​பர் 27-ம் தேதி நேரில் சென்று பாதிக்​கப்​பட்ட மக்​களை சந்​தித்து பேசி​னார். பின்​னர் அந்​தப் பகு​தியை வான்​வழி​யாக​வும் வன அதி​காரி​களு​ட​ன் ஆய்வு செய்​தார்.

பின்​னர், ஓநாய்​களை பிடிக்க முடி​யா​விட்​டால் சுட்​டுக் கொல்​லும்​படி அதி​காரி​களுக்கு முதல்​வர் ஆதித்​ய​நாத் உத்​தர​விட்​டார். இதற்​காக, பஹரைச் உள்​ளிட்ட மண்டல வன உயர​தி​காரி செம்​மாறன் நியமிக்​கப்​பட்​டுள்​ளார். தமிழ​ரான செம்​மாறன் தலை​மை​யில் 32 குழுக்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. இக்​குழுக்​கள் ஓநாய் தாக்​குதலை தடுக்க நடவடிக்கை எடுத்து வரு​கிறது.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கால்​நடை மருத்​து​வம் பயின்ற உயர​தி​காரி செம்​மாறன் கூறும்​போது, “குழந்​தைகளைக் குறி வைத்து ஓநாய்​கள் தாக்​கு​கின்​றன. பாதிக்​கப்​பட்ட 50 குக்​கி​ராமங்​களில் வசிக்​கும் 40,000 பொது​மக்​களிடம் விழிப்​புணர்வு பிரச்​சா​ரம் தொடங்கி உள்​ளோம். வெப் டிரோன் குழு, கண்​காணிப்பு குழு, அமை​திப்​படுத்​தும் குழு, துப்​பாக்​கிச் சூடு குழு, வலை மூலம் பிடிக்க குழு என 5 வகை குழுக்​களும் களம் இறங்​கி​யுள்​ளன.

இதில், 4 ஓநாய்​கள் பிடிக்​கும் போதே இறந்​து​விட்​டன. கடைசி கட்ட முயற்​சி​யாக ஓநாயை வேட்​டை​யாட​வும் அரசு அனு​மதி அளித்​துள்​ளது. ஒரு ஓநாய் காயமடைந்து தப்​பி​விட்​டது. இன்​னொரு ஓநாய் அலைந்து தாக்​குதல் நடத்த அவ்​வப்​போது வரு​கிறது. இவற்​றை​யும் விரை​வில் பிடிப்​போம்” என்று அதி​காரி செம்​மாறன் கூறி​னார்.

ஓநாய்​கள் தாக்​குதலால் கடந்த ஒரு மாத​மாக மூடப்​பட்​டிருந்​த பள்ளிகளை, தீபாவளிக்கு பிறகு திறக்க முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது. ஓநாய்​களால் காயம் அடைந்​தவர்​களுக்கு சிகிச்சை அளிக்க தற்​காலிக மருத்​து​வ​மனை​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. ஆம்​புலன்​ஸ்​களும் தயார் நிலை​யில் வைக்​கப்​பட்​டுள்​ளன. இது​போன்ற நடவடிக்​கைகளால் ஓநாய்​களால் படு​காயமடைந்த 15 பேர் காப்​பாற்​றப்​பட்​டுள்​ளனர்.

மேலும், ஓநாய்​களால் உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பங்​களுக்கு தலா ரூ.5 லட்​சம், காயம் அடைந்​தவர்​களுக்கு ரூ.50,000 இழப்​பீடு வழங்க உ.பி. அரசு உத்​தர​விட்​டுள்​ளது. கடந்த ஆண்​டும் பஹரைச்​சில் ஓநாய்​கள் தாக்​குதலில் 9 பேர் உயி​ரிழந்​தனர். தற்​போது ஓநாய்​ தாக்​குதலை வனத்​ துறை​யினர்​ கட்​டுப்​பாட்​டில்​ கொண்​டு வந்​துள்​ளனர்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.