பிரம்மோஸ் வரம்புக்குள் பாகிஸ்தான்: பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

லக்னோ: பிரம்​மேஸ் ஏவு​கணை தயாரிப்பு மையம் உத்தர பிரதேசம் லக்​னோ​வில் கடந்த மே மாதம் தொடங்​கப்​பட்​டது. இங்கு தயாரிக்​கப்​பட்ட முதல் ஏவு​கணை யூனிட்டை பாது​காப்​புத்​துறை அமைச்​சர் ராஜ்​நாத் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்​தார். இந்​நிகழ்ச்​சி​யில் அவர் பேசி​ய​தாவது:

எனது சொந்த தொகு​தி​யான லக்னோவில் 5 மாதங்​களுக்கு முன்​பு​தான் பிரம்​மோஸ் ஏவு​கணை ஆலை தொடங்​கப்​பட்டது. தற்​போது முதல் யூனிட் வெளிவந்​துள்​ளது. நாட்​டின் பாதுகாப்பு மற்​றும் நம்​பிக்கை வளர்ச்​சி​யில் இது முக்​கி​யமான நடவடிக்​கை. பிரம்​மோஸ் ஏவு​கணை வெறும் ஆயுதம் மட்​டும் அல்ல. இது உள்​நாட்டு திறனின் அடை​யாளம். தரைப்​படை, கடற்​படை மற்​றும் விமானப்​படையின் முது​கெலும்​பாக பிரம்​மோஸ் ஏவு​கணை விளங்​கு​கிறது.

பாகிஸ்​தான் முழுவதும் பிரம்மோஸ் வரம்புக்குள் உள்ளது. அந்த நாட்டின் எந்த பகு​தி​யை​யும் தாக்​கலாம். ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்​கை​யின்​போது, பிரம்​மோஸ் ஏவு​கணை தாக்​குதலின் முன்​னோட்​டத்தை நாம் பார்த்​தோம்.

உத்தர பிரதேசம் ஒரு காலத்​தில் குண்​டர்​கள் ஆட்சி நடை​பெறும் இடமாக கருதப்​பட்​டது. ஆனால் முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத் தலை​மை​யில் உ.பி. பிரம்​மாண்ட மாற்​றத்தை சந்​தித்​துள்​ளது. முதலீடு மற்​றும் பாது​காப்​புக்கு சாதக​மான சூழல் இங்கு நில​வு​கிறது. இங்கு பிரம்​மோஸ் ஏவு​கணை உற்​பத்தி மையத்தில் ஆண்​டுக்கு சுமார் 100 ஏவு​கணை யூனிட்​களை தயாரிக்க முடி​யும். இதன் மூலம் அடுத்த ஆண்​டில் ரூ.3,000 கோடி வரு​வாய் கிடைக்​கும்.

பிரம்​மோஸ் ஏவு​கணைக்கு உலகம் முழு​வதும் வரவேற்பு உள்​ளது. பிலிப்​பைன்ஸ் நாட்​டுக்கு பிரம்​மோஸ் ஏவு​கணை விற்​பனை செய்​த​பின் ரூ.4,000 கோடி மதிப்​பில் பிரம்​மோஸ் ஏவு​கணை வாங்க இரண்டு நாடு​கள் ஒப்​பந்​தம் செய்​துள்​ளன. உலகம் முழு​வதும் இருந்து நிபுணர்​கள், லக்னோ வரு​வ​தால், பாது​காப்பு தளவாட வரைபடத்​தில் லக்னோ இடம்​பிடித்​துள்​ளது. 2047-ம் ஆண்​டுக்​குள் வளர்ந்த நாடு என்ற இலக்கை அடைய, பிரம்​மோஸ் ஏவு​கணை போன்ற திட்​டங்​கள்​ மிக முக்​கிய​மானது. இவ்​வாறு ராஜ்​நாத்​ சிங்​ கூறி​னார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.