கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் பாலாஜி இவரது இன்ஸ்டாகிராம் பக்கமான ‘பாலாஜி இருக்காரா’ மூலம் அந்தப் பகுதியில் பிரபலமாகி இருந்தார். பாலாஜி மற்றும் அவரது நண்பர் கோவிந்தராஜ் ஆகியோரின் காமெடி வீடியோக்களைப் பார்த்து அவரது இன்ஸ்டா பக்கத்திற்கு சுமார் 1.15 லட்சம் ஃபாலோயர்ஸ் உள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் பாலாஜியைத் தொடர்பு கொண்ட ஒருவர், “பாண்டியன் கிராக்கர்ஸ்” பட்டாசு கடையின் தீபாவளி விளம்பரத்திற்காக ப்ரமோஷன் வீடியோ செய்யச் சொல்லிக் கேட்டுள்ளார். அதற்காக ₹35,000 தருவதாகக் […]
