ஆகாஷ் பாஸ்கரன் தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் அமலாக்கத் துறை அதிகாரிகள் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

சென்னை: திரைப்பட தயாரிப்​பாளர் ஆகாஷ் பாஸ்​கரன் தொடர்ந்​துள்ள அவம​திப்பு வழக்​கில் அமலாக்​கத் துறை அதி​காரி​கள் ஆஜராகு​மாறு உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

டாஸ்​மாக் முறை​கேடு தொடர்​பாக திரைப்​படத் தயாரிப்​பாளர் ஆகாஷ் பாஸ்​கரன் மற்​றும் தொழில​திபர் விக்​ரம் ரவீந்​திரன் ஆகியோ​ருக்கு சொந்​த​மான இடங்​களில் சோதனை நடத்​திய அமலாக்​கத் துறை அதி​காரி​கள், ஆகாஷ் பாஸ்​கரனிட​மிருந்து முக்​கிய ஆவணங்​களை கைப்​பற்​றி​யுள்​ள​தாக தெரி​வித்​தனர்.

இதை எதிர்த்து தொடரப்​பட்ட வழக்கை விசா​ரித்த சென்னை உயர் நீதி​மன்​றம், ஆகாஷ் பாஸ்​கரனிட​மிருந்து கைப்​பற்​றப்​பட்ட ஆவணங்​களை திருப்பி ஒப்​படைக்க உத்​தர​விட்​டதுடன், மேற்​கொண்டு எந்த நடவடிக்​கை​யும் எடுக்​கக்​கூ​டாது என்று தடை விதித்​தது.

இந்​நிலை​யில், தடையை மீறி மீண்​டும் நோட்​டீஸ் அனுப்​பி​யுள்​ள​தாகக் கூறி ஆகாஷ் பாஸ்​கரன் உயர் நீதி​மன்​றத்​தில் அவம​திப்பு வழக்கு தொடர்ந்​தார். இதில் அமலாக்​கத் துறைக்கு நோட்​டீஸ் அனுப்​பியதை எதிர்த்து அமலாக்​கத் துறை உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​தது.

இந்​நிலை​யில்,இந்த வழக்​கு நீதிப​தி​கள் எம்​.எஸ்​. ரமேஷ், வி.லட்​சுமி​நா​ராயணன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது. அப்போது இந்த வழக்​கில் அமலாக்​கத் துறை​யின் மேல்​முறை​யீட்டு ஆணை​யத் தலை​வர் பிரதீப்​கு​மார் உபாத்​யாயா, நிர்​வாகப் பதி​வாளர் நஸ்​ரின் சித்​திக் ஆஜராக உத்​தர​விட்​டு, விசா​ரணையை தள்​ளி​வைத்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.