ஆர்ஜே தீபக்கின் தொப்பி பட்டாசு, அனிதா சம்பத்தின் ஆடம்பர ஆட்டோ, தீபாவின் குவா குவா – தீபாவளி மெமரீஸ்!

பண்டிகைகளோட ஹைலைட்ஸ்ல ஒண்ணு, சந்தோஷ நினைவுகளை உருவாக்குறது. அப்படி, சில செலிப்ரிட்டீஸ்கிட்ட அவங்களோட ஹேப்பி தீபாவளி மெமரீஸ் கேட்டோம்…

ஆர். ஜே தீபக்

“எனக்குப் பட்டாசு போட ரொம்பப் பிடிக்கும். ஆனா, எங்க வீட்ல ஒரு ரூல் இருக்கும். பட்டாசு பாக்ஸை தீபாவளி அன்னைக்குத்தான் பிரிக்கணும்னு சொல்லுவாங்க. ஆனா, என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் தீபாவளிக்கு நாலு, அஞ்சு நாள் முன்னாடியே பட்டாசு வெடிக்க ஆரம்பிச்சிருவாங்க. நானும் அவங்களோட சேர்ந்து, அவங்களோட பட்டாசை வெடிப்பேன்.

RJ Deepak
RJ Deepak

ஒரு தடவை, ‘டேய் கவனிச்சீங்களா..? இவன் பட்டாசு கொண்டு வராம நம்ம பட்டாசையே காலி பண்றான்’னு ஒருத்தன் என்னை ஓசிப் பட்டாசு ஆக்கிப் பேசிட்டான். ’ஆமாடா…’னு சொல்லி, யாரும் எனக்குப் பட்டாசு தரல. அந்த அவமானத்தோட நேரா எங்க வீட்டுக்குப் போனேன். யாருக்கும் தெரியாம பட்டாசை ஒரு தொப்பிக்குள்ள வெச்சு, அதை தலையில மாட்டிக்கிட்டு வெளிய ஓடிட்டேன். ஒவ்வொரு தீபாவளிக்கும் இப்டித்தான் தொப்பி பட்டாசு வெடிச்சிட்டு இருந்தேன். ஒரு முறை போட்டி போட்டு வெடி வெடிச்சப்போ, என் ஃப்ரெண்ட் கையில பட்டாசு வெடிச்சுடுச்சு. எங்க வீட்டுல எனக்கு முதுகுல பட்டாசு போட்டுட்டாங்க. கொடுமை என்னனா… இதை மெமரீஸ்னு மட்டும் சொல்லிட முடியாது. இப்பவும் எங்கம்மா, பட்டாசை பதுக்கித்தான் வெச்சிருக்காங்க!”

நான் வளர்ந்துட்டேனே மம்மி!

அனிதா சம்பத்

“மீடியாவுக்கு வந்த பிறகு தினம் தினம்கூட புது டிரெஸ் போட வாய்ப்புக் கிடைச்சது. ஆனா, சின்ன வயசுல எல்லாம் தீபாவளிக்குத்தான் புது டிரெஸ். அது எடுக்கணும், இது எடுக்கணும்னு முன்னாடியே டிசைன், கலர் எல்லாம் யோசிச்சு வெச்சுக்குவேன். தீபாவளி நெருக்கத்துலதான் கடைக்குப் போவோம். அவ்ளோ கூட்டத்துல, எனக்குப் பிடிச்ச ஒரு டிரெஸ்ஸை எடுத்துப் பில் போடுறது ரொம்ப ஹேப்பியா இருக்கும். தீபாவளி ஷாப்பிங் முடிச்சுத் திரும்பி வரும்போது, ஆட்டோல கூட்டிட்டு வருவாங்க.

Anitha sambath

20 வருஷத்துக்கு முன்னாடியெல்லாம் ஆட்டோல போறது எங்களுக்கு ரொம்ப ஆடம்பரமான விஷயமா இருந்தது. வருஷத்துக்கு ஒரு முறைதான் ஆட்டோ பயணம் கிடைக்கும், ஜாலியா இருக்கும். எடுத்துட்டு வந்த டிரெஸ்ஸை சித்தி, பெரியம்மானு எல்லார்கிட்டயும் ஆசையா காட்டுவேன். இப்போ எத்தனையோ புது டிரெஸ் போட்டாலும், கார்ல, ஃப்ளைட்லனு போனாலும் சின்ன வயசு தீபாவளி ஷாப்பிங் ஸ்பெஷல்தான்!’’

நினைவோ பல பறவைகள்!

அனிதா சந்தோக்

“தீபாவளிக்கு புது டிரெஸ் மட்டுமில்லாம ஹேண்ட்பேக், அக்சஸரீஸ்னு எல்லாத்தையும் பார்த்துப் பார்த்து வாங்குவேன். எழுந்ததும் குளிட்டுச்சு, டிவி பார்க்க உட்கார்ந்துருவேன்.

கே.டிவி, சன் டிவி-யில மாத்தி மாத்திப் படம் பார்ப்பேன். இன்னைக்கு எஃப்.டி.எஃப்.எஸ் தியேட்டர்ல போய்ப் பார்த்தாலும், அப்போ சேனல்ஸ்ல ’தீபாவளி சிறப்புத் திரைப்படம்’னு என்ன படம் போட்டாலும் மாய்ஞ்சு மாய்ஞ்சு பார்க்குற சுகம் தனி. எங்க அம்மா ஒவ்வொரு தீபாவளிக்கும் ‘ஆலு பூரி’ பண்ணுவாங்க. அது தீபாவளியை இன்னும் ஸ்பெஷல் ஆக்கும்!”

ரெட்ரோ ரெட்ரோ… டிஸ்கோ டிஸ்கோ!

வி.ஜே தீபிகா

“ஃப்ளாஷ்பேக் போட்டு அப்படியே 1996-ல போய் லேண்ட் ஆனோம்னா… அந்த வருஷ தீபாவளிக்குத்தான் நான் பிறந்தேன். அப்போ, எங்கப்பா வெளிநாட்டுல வேலை பார்த்துட்டு இருந்தார். அதனால எங்கம்மா நான் பிறந்ததும், ‘பொண்ணு பிறந்திருக்கு’னு அவருக்கு லெட்டர் எழுதியிருக்காங்க. ‘தீபாவளி அன்னைக்கு பொறந்ததால நம்ம பிள்ளைக்குத் தீபிகானு பேர் வை’னு எங்க அப்பா பதில் லெட்டர் போட்ருக்காரு.

vj deepika

இதுதான் நான் ’தீபிகா’வான வரலாறு. அதனால, தீபாவளி மெமரீஸ் என் பேருலேயே இருக்கு. வேலைக்காகச் சென்னைக்கு வந்த பிறகு, பிறந்தநாளுக்கு ஊருக்குப் போறது குறைஞ்சு போச்சு. ஆனா, தீபாவளிக்குக் கண்டிப்பா ஊருக்குப் போயிடுவேன். ரெண்டும் முன்னப் பின்னதான் வரும்ங்கிறதால… பிறந்தநாள் கேக்கை தீபாவளி அன்னிக்கு வெட்டிக்குவேன்!”

டபுள் டிலைட்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.