பெர்த்,
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் மற்றும் ஐந்து டி20 போட்டியில் விளையாட உள்ளது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் ஒரு நாள் போட்டி தொடர் நடைபெற உள்ளது. அதன்படி இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான முதல் ஒருநாள் போட்டி பெர்த்தில் இன்று நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்சேல் மார்ஷ் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
இந்த போட்டியில், ரோகித் (8), கேப்டன் கில் (10), கோலி (0), ஸ்ரேயாஸ் அய்யர் (11) ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அக்சர் பட்டேல் (31), கே.எல். ராகுல் (38) சற்று நிலைத்து நின்று ஆடினர். இதனால், இந்திய அணி ரன்களை சேர்த்தது. அவர்கள் ஆட்டமிழந்ததும், வாஷிங்டன் சுந்தர் (10), ராணா (1) ரன்களில் வெளியேறினர். நிதிஷ் குமார் ரெட்டி (19) 2 சிக்சர்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். அர்ஷ்தீப் சிங் ரன் எதுவும் எடுக்காமல் ரன் அவுட் ஆனார். முகமது சிராஜ் (0) ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இந்திய அணி 26 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 136 ரன்கள் சேர்த்து உள்ளது. மழையால் ஆட்டம் 50 ஓவர்களுக்கு பதிலாக 26 ஓவர்களாக குறைக்கப்பட்டது. டி.எல்.எஸ். விதிகளின்படி ஆஸ்திரேலிய அணி 26 ஓவர்களில் 131 ரன்களை எடுக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.