கரூர் மண்டலத்தில் புதிய 5 தாழ்தள நகரப் பேருந்துகள் சேவை: செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்

கரூர்: புதிய 5 தாழ்தள நகரப் பேருந்துகள் சேவையை முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக – கரூர் மண்டலம் சார்பில் புதிய 5 தாழ்தள நகரப் பேருந்துகள் சேவை தொடக்க விழா இன்று (அக்.19-ம் தேதி) கரூர் திருமாநிலையூர் புதிய பேருந்து நிலையத்தில் நேற்று நடைபெற்றது.

ஆட்சியர் மீ.தங்கவேல் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கொடியசைத்து பேருந்துகள் சேவை தொடங்கி வை த்தார். கரூர் மாநகராட்சி துணை மேயர் ப.சரவணன், மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள் எஸ்.பி.கனகராஜ், ஆர்எஸ்.ராஜா, சக்திவேல், மாநகராட்சி ஆணையர் கே.எம்.சுதா, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கரூர் மண்டல துணை மேலாளர் சாமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இவற்றில் கரூர் குளித்தலை, கரூர் பாளையம் வழித்தடங்களில் தலா 2 பேருந்துகள், கரூர் வேலூர் வழித்தடத்தில் 1 பேருந்தும் இயக்கப்படு கிறது. செய்தியாளர்களிடம் செந்தில்பாலாஜி கூறியது: இந்த புதிய பேருந்துகள் மாற்றுத் திறனாளிகள் எளிதில் பயணிக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டிருக்கின்றன.

புதிய பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வந்தபின் எந்த இடங்களிலும் போக்குவரத்து நெரிசல் இல்லை. கரூர் மக்கள் வியந்து பார்க்கக்கூடிய அளவுக்கு மிக பிரம்மாண்டமாக, எல்லா வசதிகளும் கூடிய சிறப்பம்சங்களுடன் புதிய பேருந்து நிலையம் வடிவமைக்கப்பட் டுள்ளது இன்னும் கூடுதல் தேவைகள் இருந்தாலும் அதை செய்வதற்கு முதல்வர் தயாராக இருக்கின்றார்கள்.

புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பழைய பேருந்து நிலையத்திலிருந்து 24 மணி நேர நகரப் பேருந்துக்கள் சேவை உள்ளன. சேலம், ஈரோடு, கோவை, தாராபுரம், பொள்ளாச்சி செல்லக்கூடிய பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு கரூர் பழைய பேருந்து நிலையத்துக்கு சென்று அங்கிருந்து செல்லக்கூடிய இடங்களுக்கு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முதல்வர் திட்டங்களை அறிவித்து, அதற்கான நிதிகளைக் கொடுத்து, நாம் செயல்படுத்த நினைக்கின்ற பொழுது சிலர் மக்கள் மீதுஅக்கறை இல்லாதவர்கள், மக்களுக்கு எதிராகச் செயல்படக் கூடியவர்கள், மக்களுக்கு எந்த நன்மையும் கரூர் மாவட்டத்தில் கிடைத்து விடக்கூடாது என்று குறுகிய மனப்பான்மையோடு இருக்கக்கூடியவர்கள், அவர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்த பொழுதும் மக்களுக்கு எதையும் செய்யாதவர்கள், இப்பொழுது இந்தத்திட்டங்கள் நடந்துவிடக்கூடாது என்பதற்காக தொடர்ந்து ஒவ்வொரு திட்டங்களையும் நீதிமன்றத்திற்குச் சென்று தடையாணை பெறுகின்றனர். அதன்பின் போராடி வெற்றிபெற்று தான் திட்டங்கள் கொண்டு வரப்படுகிறது.

திருவள்ளுவர் மைதானத்தில் ரூ.7 கோடியில் மாவட்ட மைய நூலகம் கட்டவும் தடையாணை பெற்றன்ர. அதன் பின் நீதிமன்றம் சென்று வெற்றி பெற்று கட்டப்படுகிறது. இப்படி ஒவ்வொரு பணிகளாக கரூரில் முன்னெடுக்கக்கூடிய பணிகள் அனைத்துமே நீதிமன்றம் சென்று வெற்றிபெற்று பணிகளைத் தொடங்கக்கூடிய சூழல் இருக்கின்றன. வரக்கூடிய ஆண்டுகளில் பொதுமக்களுக்கு இன்னும் சிறப்புத் திட்டங்கள் சிறப்பாக நடைபெற இருக்கின்றன என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.