பாங்காக்கில் உள்ள சியாம் சதுக்கத்தில் இந்தியர் ஒருவர் துப்பாக்கி வடிவ லைட்டரைக் காட்டி பொதுமக்களை மிரட்டியதாகக் கைது செய்யப்பட்டுள்ளார். நோவோடெல் ஹோட்டல் முன் கடந்த திங்கட்கிழமை மாலை 4 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர் சாஹில் ராம் ததானி, 41, என அடையாளம் காணப்பட்டுள்ளார். செய்தி ஊடகங்கள் காட்டிய வீடியோவில், அவர் சத்தமாக குரல் எழுப்பி நடந்து செல்வதையும், துப்பாக்கி வடிவ பொருளை பொதுமக்களை நோக்கிக் காட்டுவதையும் காட்டியது. இதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் […]
